வியாழன், 13 ஆகஸ்ட், 2026

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 13 முதல், தொடர் போராட்ட அறிவிப்பு எதிரொலி. மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மரிக்க முயன்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுச்சாமி மயிலாடுதுறை தங்கும் விடுதியிலேயே அதிரடி கைது. விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து நாகை விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக  அரசை கண்டித்து ஆகஸ்ட் 13 முதல், தொடர் போராட்ட அறிவிப்பு எதிரொலி. மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுச்சாமி மயிலாடுதுறை தங்கும் விடுதியிலேயே அதிரடி கைது. விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து நாகை விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே  மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக தொடர் போராட்டங்கள் அறிவித்து அறிக்கையின் வாயிலாக கர்நாடக அரசிற்கு தலைவர் வேலுசாமி பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார். 
அதில்  கர்நாடகா அணைகளில் தற்போது போதிய தண்ணீர் இருப்பு வைத்துக்கொண்டு தண்ணீர் திறந்து விடாமல் துரோகம் விளைவித்ததற்கு கர்நாடகா அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் எனது தலைமையில் வருகின்ற 13 ந் தேதி அன்று முதல் கர்நாடகாவில் இருந்து தமிழகம் மற்றும்  கேரளா செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் இரயில்கள் மேலும்  தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் இரயில்கள் போக்குவரத்தை முற்றிலும் முடக்குவோம். மேலும் தமிழகம் வழியாக கர்நாடகா செல்லும் எரிவாயு மற்றும் தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்து கர்நாடகா செல்லும் மின்சாரம் உட்பட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் பலகட்ட தொடர் போராட்டம் வாயிலாக கர்நாடகாவில்  உள்ள தொழில்வளம் பாதிக்கும் வகையில் முடக்கி காட்டுவோம் என்பதை கர்நாடகா அரசுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை  என்று இந்த அறிக்கையின் வாயிலாக கர்நாடக அரசுக்கு பகிரங்க எச்சரிக்கையினை வேலுசாமி அறிவித்து இருந்தார். 
அதனை செயல்படுத்தும் விதமாக முதற்கட்ட போராட்டமாக மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க நடவடிக்கை எடுத்து இருந்த நிலையில்  நேற்று மயிலாடுதுறை தங்குமிடுதியில் தங்கி இருந்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையிலான விவசாயிகளை இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தங்கும் விடுதியிலேயே சிறை பிடித்தனர். மேலும் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட விவசாயி சங்க பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டது குறித்து வெளியில் தகவல் கசியாமல் இருக்க விவசாய பெருங்குடி மக்களின் கைபேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. என்றாலும் இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மற்றும் நாகை விவசாய சங்க பிரதிநிதிகள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். 
மேலும் மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க ரயில் நிலையம் உள்ளே நுழைய முயன்ற போது காவல்துறையினருக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மிகப்பெரிய பரபரப்பு காணப்பட்டது. இதனை எடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற மயிலாடுதுறை மற்றும் நாகை விவசாயிகளையும் ஏற்கனவே முன்கூட்டியே முன்னெச்சரிக்கையின் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு இருந்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் மாலை ஏழு மணிக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். தமிழக விவசாய பெருங்குடி மக்களின் நலனுக்காகவும் அவர்களது உரிமைகளுக்காகவும் போராட்டம் அறிவித்து காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் சங்க தலைவர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக விவசாயிகளிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் நிதர்சனம். என்றாலும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் முன் எடுத்துள்ள கர்நாடக அரசுக்கு எதிரான தொடர் போராட்டம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: