வியாழன், 13 ஆகஸ்ட், 2026

அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். 

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்டம் சந்தியூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. 
மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்னி பழனியப்பன் ஏடிசி தொழிற்சங்க செயலாளர் மற்றும் டாஸ்மாக் கூட்டுக் குழு சார்பாக LPF CIt VC பாட்டாளி மக்கள் கட்சி விற்பனையாளர் தொழிற்சங்கம் ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுபான சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் அரசு பணியாளர்களுக்கு இணையான சலுகைகள் வழங்கிட வேண்டும், மதுபான விற்பனையை தனியார் மயமாக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் மற்றும் ஆன்லைன் மது விற்பனை முறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து தங்களது 14 அம்ச கோரிக்கைகள் குறித்தும் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை படிவத்தை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் வழங்கினார்.
இந்த போராட்டம் குறித்து சேலம் மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவரும், தொ.மு.ச தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜம்பு செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசின் டாஸ்மாக் பணியாளர்களின் 14 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்பொழுது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும், தங்களது பல்வேறு கோரிக்கைகளை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே நிறைவேற்ற தமிழக அரசையும் டாஸ்மாக் நிர்வாகத்தையும் வலியுறுத்துவதாக கூறினார்.  இந்த கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: