புதன், 12 ஆகஸ்ட், 2026

ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று மாபெரும் தொடர் வந்தே பாரத் இரயில் மறியல் போராட்டம். காவிரி உரிமையை மீட்டெடுக்க கர்நாடகா அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அதிரடி எச்சரிக்கை.

நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.

ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று மாபெரும் தொடர்  வந்தே பாரத்  இரயில் மறியல் போராட்டம். காவிரி உரிமையை மீட்டெடுக்க கர்நாடகா அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அதிரடி எச்சரிக்கை.

மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கிட்டு பிரச்சினை தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம். அந்த வகையில் இந்திய திருநாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தே மாதரம் ரயில் மறியல் போராட்டத்தினை பகிரங்கமாக அறிவித்துள்ளார் அந்த சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி செய்திக் குறிப்பின் வாயிலாக. அதில்,.
கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை ஆண்டுதோறும் தொடர்ந்து காவிரியில் திறந்துவிட மறுத்து வருகிறது.மேலும்  தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும்  நோக்கத்தோடு  கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டும் முயற்ச்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருவதை அதை  முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதியில் இருந்து இருமார்கமாக வரும் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை வருகின்ற ஆகஸ்ட் 15 ந் தேதி சுந்திர தினத்தன்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எனது தலைமையில் தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி ‌தமிழகத்தில் ரயில் மறியல் தொடர் போராட்டம் நடைபெறும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கர்நாடகா அரசுக்கு இந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன் என்று அந்த சங்கத்தின் மாநில தலைவர். வேலுச்சாமி எச்சரித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: