புதன், 26 ஆகஸ்ட், 2026

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2026 முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 
2026 முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை 2026 முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரியின் சிறப்பு அரங்கத்தில்  நடைபெற்றது. கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா  முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி தலைவர் திரு.வள்ளியப்பா தலைமை வகித்தார். இந்த விழாவில் சென்னை ஆயுதப்படை, கூடுதல் காவல்துறைத் தலைவர், தினகரன் ஐ.பி.எஸ் மற்றும் பெங்களூரு கனரா வங்கியின், பிரிவுத் தலைவர், அனந்த் ஜலோன்ஹா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக சிறப்புவிருந்தினர்கள், கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் கல்லூரியின் அட்மிஷன் டீன் மற்றும் கணினி அறிவியல் துறைத்தலைவர் சத்தியபாமா விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். 
இதனைத்தொடர்ந்து பேசிய கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா மற்றும் தியாகுவள்ளியப்பா ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லூரி காத்திருப்பதாகவும், அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். பின்னர் சிறப்பு விருந்தினர், சென்னை ஆயுதப்படை, கூடுதல் காவல்துறைத் தலைவர், தினகரன் ஐ.பி.எஸ் பேசும் பொழுது, மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்கள் முக்கியத்துவத்தையும், தனித்துவத்தையும் இழந்து விடாமல் இருக்க  வேண்டுமென்றும் இதற்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மிக அவசியம் என்றார். கனரா வங்கியின், பிரிவுத் தலைவர், அனந்த் ஜலோன்ஹா பேசும் பொழுது, சிறந்த உள் கட்டமைப்பு, நல்ல பேராசிரியர்கள், மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் அகில இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது என்றும் இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் நீங்கள் பெருமை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.     
சோனா கல்வி குழுமத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா பேசும்பொழுது, வாழ்வின் முக்கியத்தருணமான இந்த காலக்கட்டத்தில் படிப்பில் முழுக்கவனம் செலுத்தி மாணவர்கள் சிறந்து விளங்க வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள், பல்வேறு கல்வி உதவித்தொகை, பிற வசதிகள் அவற்றை பயன்படுத்திக்கொள்வது பற்றி கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் எடுத்துரைத்தார். இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர்கள் காதர்நவாஷ், கனகராஜ், கவிதா, பேராசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாட்டினை துறைத்தலைவர் ரேணுகா மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக எம்.பி. ஏ துறைத்தலைவர் அஞ்சனி நன்றியுரையாற்றினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: