சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
மிலாடி நபியையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்ற ஊர்வலம் :
இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாடி நபியாக உலக இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சேலத்தில் கோட்டை தன்ஜிமே அஹ்லே சுன்னத்வல் ஜமாத் சார்பில் மிலாடி நபி விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக இதில் முத்தவல்லிகள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் இருந்து ஜாமியா மசூதியின் முன்னாள் முத்தவல்லி நாசர்கான் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தினை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இஸ்லாமிய குழந்தைகளின் இசை முழக்கத்துடன் தொடங்கிய இந்த ஊர்வலமானது, சேலம் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை வழியாக வந்து மசூதியை அடைந்தனர். ஊர்வலத்தில், ஜமாத்தார்களும், சிறுவர்களும் பங்கேற்று இசை வாத்தியங்கள் முழங்க நபிகள் நாயகத்தை துதித்து பாடல்களை பாடியவாறு வந்தனர். இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்ட்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.



0 coment rios: