சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் நகர்ப்புற மைய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.
நகர்ப்புற மைய அளவிலான தடகளப் போட்டிகள் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பல்வேறு அணிகள் பங்கேற்ற இந்த தடகள போட்டியில் சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். தடகள விளையாட்டில் உள்ள பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக (2025 மற்றும் 2026) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர். மொத்தம் 118 புள்ளிகள் பெற்று சிறந்த அணியாகத் தேர்வு பெற்றது. பல்வேறு தடகளப் போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்று பள்ளியின் வெற்றிக்கு பெருமை சேர்த்தனர். குறிப்பாக இளையோர் பிரிவில் மாணவர் விஷ்ணு, மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், மூத்தோர் பிரிவில் மாணவர் தமிழரசன், 800 மீ., 1500 மீ. மற்றும் 3000 மீ. ஓட்டங்களில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். தொடர்ந்து தடகளப் போட்டிகளில் இரண்டாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் அருட்பணி ஜோதி பெர்னான்டோ, உதவி தலைமை ஆசிரியர் அருட்பணி டேவிட், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ராபர்ட் ஆகியோர் வெகுவாக பாராட்டி வாழ்த்தினர். தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது, சிறுமலர் பள்ளியின் விளையாட்டுத் திறமை, மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த சான்றாகும்.



0 coment rios: