ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

தமிழகத்தில் இன்று முதல் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் எதிரொலி. தமிழகம் முழுவதும் படிப்படியாக பால் நிறுத்தும் போராட்டம் தமிழக விவசாயிகள் தீவிரப் படுத்துவர். தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை.

நாமக்கல்.
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் இன்று முதல் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் எதிரொலி. தமிழகம் முழுவதும் படிப்படியாக பால் நிறுத்தும் போராட்டம் தமிழக விவசாயிகள் தீவிரப் படுத்துவர். தமிழக  விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு எச்சரிக்கை.

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் கூட்டத் தொடரில், பசும்பால் லிட்டருக்கு கொள்முதல் விலையாக மூன்று ரூபாய் உயர்த்தி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். இதனுடைய ஆவின் பால் பண்ணைகளுக்கு, தமிழக முதலமைச்சரின் இந்த பால் கொள்முதல் விலை அதிருப்தி அளிப்பதாக உள்ளது என்றும் இதனை ஏற்புடையதாக இல்லை என்பதோடு பசும்பால் லிட்டருக்கு கொள்முதல் விலையாக 10 ரூபாய் உயர்த்தி தரவேண்டும் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி ஏற்கனவே தெரிவித்திருந்ததோடு மட்டுமல்லாமல், 
தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி முதல் ஆவின் பால்பனைகளுக்கு பால் அனுப்பாமல் தமிழக முழுவதும் உற்பத்தி நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு ஆதரவையும் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் தமிழக முழுவதும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் இன்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கொள்முதலுக்கு  வழங்காமல் பல்வேறு நிலையில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக, 
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் பாகல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு 24.8.2026 இன்று முதல் விவசாயிகள் ஆவின் நிவனவனம் மூலம் விவசாயிகள் இடம் கொள்முதல் செய்யும் பால்  விலை கட்டுபடியான விலை இல்லை என்று தமிழ்நாடு அரசுக்கு எதிர்பு தெறிவித்து ஆவின் நிறுவனத்திற்கு  விவசாயிகள் பால்  கொள்ளமுதலுக்கு அனுப்பாமல் பால் நிறுத்தும் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல் இனி தமிழகம் முழுவதும் படிப்படியாக பால் நிறுத்தும் போராட்டம் தமிழக விவசாயிகள் தீவிரப்படுத்துவார்கள் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்று சங்கத்தின் மாநில தலைவர்
R.வேலுசாமி.
தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கிய முதல் நாளே நாமக்கல் கோவை திருச்சி திருப்பூர் கிருஷ்ணகிரி விழுப்புரம் வேலூர் மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான விவசாயிகள் ஆவின் நிறுவனங்களுக்கு பால் வழங்காமல் சாலையில் கறந்த பாலை ஊற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: