நாமக்கல்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழகத்தில் கட்டுபடி ஆகாத பால் கொள்முதல் விலை விவகாரம். தமிழக முழுவதும் வரும் 24 ஆம் தேதி முதல் ஆவின் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம். தமிழக விவசாயிகள் சங்க ஆதரவுடன் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.வேலுச்சாமி அழைப்பு.
தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் ஆவின் பாலுக்கு கொள்முதல் விலையாக 3 ரூபாயை உயர்த்தி அறிவித்தார். இதனை ஏற்க முடியாத தமிழக விவசாய பெருங்குடி மக்களால் பல்வேறு எதிர்ப்புகளும் கோரிக்கைகளும் எழுந்த வண்ணமே உள்ளன. இது தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி, தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பண்ணைக்கு பால் உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தமிழக விவசாயிகள் பெருந்திரளாக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அறிவிப்பில், தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கு தற்போது வழங்கப்படும் விலையில் இருந்து கூடுதல் கொள்முதல் விலையாக 19.8.2026 அன்று தமிழ்நாடு அரசு லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்தி அறிவித்த அறிவிப்பு பால் உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் தமிழக விவசாயிகளுக்கும் இது கட்டுப்படியான விலை இல்லை வருகின்ற 24.8.2026 ந் தேதி முதல் பால் ஆவின் நிறுவனத்திற்கு கொள்முதலுக்கு தொடர்ந்து அனுப்பாமல் பால் நிறுத்தும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்தும் போராட்டத்திற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு தெறிவித்து, தமிழகம் முழுவதும் பால் நிறுத்தும் போராட்டத்தில் பங்கேற்போம் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுமாறும் தமிழக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



0 coment rios: