நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.
உள்நாட்டில் பசுமை புரட்சி மற்றும் வெண்மை புரட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளின் வாழ்வாரம் ஏற்றம் பெற, மத்திய அரசு இனி வரும் காலங்களில், மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் உணவு பொருட்களை நிறுத்த வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி வலியுறுத்தல்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R.வேலுச்சாமி, மத்திய அரசை வலியுறுத்தி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அங்க செய்தி குறிப்பில்,
உள்நாட்டின் தேவைக்காக, மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து 10 லட்சம் டன் சர்க்கரையை, அக்டோபர் 31 ந் தேதி வரை முழு வரி விலக்குடன் இறக்குமதி செய்ய முன்வந்தது.இந்தியாவில் இனி வரும் காலங்களில் பண்டிகை வருவதை முன்னிட்டும் உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளதாலும், சர்க்கரை விலை இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வதை அறிந்த விவசாயிகளிடம் இச்செய்தி மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசு உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்ததை காரணம் சொல்லி வெளிநாட்டில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்வதாக சொன்னதற்கு, இனிவரும் காலங்களில் இதுப்போன்று உணவு தேவைக்காக வெளிநாட்டில் இருந்து சர்க்கரை மற்றும் இதர உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது என மத்திய பாஜக அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த செய்தி குறிப்பின் வாயிலாக நினைவூட்டுகிறேன்.
பாரத நாடு பழம்பெரும் நாடு இந்தியாவில் உணவு உற்பத்தி செய்வதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் உள்ளது.பசுமை புரட்சி மற்றும் வெண்மை புரட்சி உருவாக்கும் வகையில் உள்நாட்டில் உள்ள விவசாயிகள் மகத்தான சாதனை படைக்கும் ஆற்றல் மிக்கவர்களாக இந்திய விவசாயிகள் உள்ளனர். இந்தியாவில் உள்ள விவசாயிகளின் ஆற்றல் திறமையை புரிந்து கொண்டு மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவில் இருந்து உடனடியாக 50% உயர்த்தி லாபகரமான விலையான MSP - யை நிர்ணயம் செய்யாததால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு வெளி சந்தையில் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. அதனால் விவசாயிகள் விவசாயம் செய்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது உள்நாட்டில் உணவு உற்பத்தி இல்லாமல் தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுளது. மத்திய அரசு இனிவரும் காலங்களில் வெளிநாட்டில் இருந்து இறக்கும் செய்யும் உணவு பொருட்களை நிறுத்திவிட்டு உள்நாட்டில் உள்ள பசுமை புரட்சி மற்றும் வெண்மை புரட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளின் வாழ்வாரம் ஏற்றம் பெறும் வகையில் மத்திய அரசு இனி வரும் காலங்களில் செயல்பட வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி வலியுறுத்தி உள்ளார்.



0 coment rios: