சேலம்,
S.K.சுரேஷ்பாபு.
கோயில்களுக்கு வழங்கப்படும் பசுக்கள் அர்ச்சகர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம், கோயில் அர்ச்சகர்கள் நலச் சங்கத் தலைவர் பி. வாசு மனு
இது தொடர்பாக கோவில் பூசாரிகள் நலச்சங்க தலைவர் பி வாசு அளித்துள்ள கோரிக்கை மனுவில், தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பசுக்களை, அரசு உத்தரவுப்படி தகுதியுள்ள கோயில் அர்ச்சகர்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என்று கோயில் அர்ச்சகர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதில் முக்கிய கோரிக்கைகளாக, புரட்டாசி மாதம் மற்றும் விசேஷ நாட்களில் கோயில்களுக்கு வழங்கப்படும் பசுக்கள் அர்ச்சகர்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும். பசுக்களை வழங்குவதில் முறைகேடுகள் மற்றும் தேவையற்ற நிபந்தனைகளை (பராமரிப்புக் கட்டணம், தடுப்பூசி சான்றிதழ் போன்றவை) தவிர்க்க வேண்டும். கோயிலுக்கு வரும் அனைத்துப் பசுக்களையும் முறையாகக் கணக்கெடுத்து, காணொளிப் பதிவு செய்து, எவ்விதத் தடையுமின்றி அர்ச்சகர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பசுக்களைக் கால்நடைச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பக்தர்களின் நம்பிக்கையைக் காக்க அர்ச்சகர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்றும் கோயில் அர்ச்சகர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் பி.வாசு குறிப்பிட்டுள்ளார்.



0 coment rios: