சேலம்,
S.K.சுரேஷ்பாபு.
திரை மற்றும் அரசியல்: இளைய தலைமுறையின் கண்ணோட்டமும் தமிழகத்தின் எதிர்காலமும். சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தமிழ் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற விழாவிற்கு சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. ராம்குமார் சிங்காரம் முன்னிலையில் நடைபெற்ற போட்டிகளில், கொள்கையா? கவர்ச்சியா? தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்களின் மனநிலை,
நீதிக்கட்சி முதல் இன்றைய அரசியல் வரை: தமிழகத் திரையுலகின் பரிணாம வளர்ச்சி, இணையத் தலைமுறையும் பிம்ப அரசியலும் ஜனநாயகத்திற்கு ரசிகர் மன்ற மனப்பான்மை பலமா அல்லது பலவீனமா, திரைப்படங்களில் சமூக நீதி விழிப்புணர்வு என்பது வெறும் தேர்தல் உத்தியா? மற்றும் புதிய தமிழகத்தை நோக்கிய ஆரோக்கியமான ஜனநாயகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன.
மாநிலம் முழுவதிலும் உள்ள 30 மாவட்டங்களைச் சேர்ந்த, பல்வேறு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு, மேற்கூறிய தலைப்புகளில் உரையாற்றினர். இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன் இவ்விழாவில் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. ராம்குமார் சிங்காரம், சிறப்புரை ஆற்றியதுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார்.
தனது சிறப்புரையில், சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் விவாதப் போட்டிகள், தேசிய மற்றும் மாநில அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகளின் தலைப்புகள் வழக்கமாக முக்கியமான சமகாலப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவை என்று குறிப்பிட்டார்.
பரிசு வழங்கும் விழாவில், சென்ட்ரல் லா கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திரு. பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். உதவிப் பேராசிரியர் திரு. மணிகண்டன் நன்றியுரை ஆற்றினார்.



0 coment rios: