புதன், 19 ஆகஸ்ட், 2026

தமிழக விவசாயிகளுக்கு ஆவின் பால் கொள்முதல் விலையில் இருந்து 3 ரூபாய் உயர்த்தியதை மறு பரிசீலனை செய்து 10 ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். தமிழக முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R.வேலுச்சாமி கோரிக்கை.

நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு

தமிழக விவசாயிகளுக்கு ஆவின் பால் கொள்முதல் விலையில் இருந்து 3 ரூபாய்  உயர்த்தியதை மறு பரிசீலனை செய்து 10 ரூபாயாக  உயர்த்தி அறிவிக்க  வேண்டும். தமிழக முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R.வேலுச்சாமி கோரிக்கை.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஆர் வேலுச்சாமி தமிழக விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தமிழக அரசின் கூட்டுறவு பால் பண்ணைகளில் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படும் பசு மற்றும் எருமை பாலுக்கு கொள்முதல் விலையாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை தமிழக விவசாயிகள் சங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 110 விதியின் கீழ் தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கி அறிவிப்பு ஒன்றிணையும் வெளியிட்டார். 
இந்த விலை ஏற்ற அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை என்று நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர் வேலுச்சாமி அறிகையின் வாயிலாக தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை ஒன்றினை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வெளிப்பாட்டில்,
தமிழ்நாடு அரசு ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் மூலம் தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பசும்பாலின் தற்போதைய விலை ரூ.35 ம் ஏற்கனவே ஆவின் நிறுவனம் மூலம் ரூ.3 ம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டதையும் சேர்த்து ரூ.38. இதில் இருந்து கூடுதலாக இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும் இது விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை இல்லை. விவசாயிகள் பால் உற்பத்தி செய்ய, கால்நடைகளுக்கு உண்டான தீவனம் மற்றும் கால்நடைகளை பராமரித்து பால் உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேலை ஆட்கள் கூலி பல மடங்கு அதிகரித்துள்ளது. 
மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக கால்நடைகளுக்கு உண்டான இடு பொருட்களின் விலை வெளிச்சந்தையில் பலமடங்கு அதிகரித்துள்ளது அதனால்தான் தமிழக விவசாயிகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் பால் கொள்முதல் விலையை தற்போது வழங்கப்படும் விலையில் இருந்து ரூ.10  உயர்த்தி அறிவிக்கக் கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைத்தோம் இன்று தமிழக விவசாயிகளுக்கு ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தியதை மறு பரிசீலனை செய்து தற்போது விலையில் இருந்து கட்டுப்படியான விலை ரூ.10 உயர்த்தி அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர் வேலுச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: