சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது. சேலத்தில் காவல்துறை அதிகாரியின் செயலால் நெகிழ்ந்த பள்ளி மாணவன்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் நந்தகுமார் ஈஸ்வரி தம்பதியினர். இவர்களுடைய மகன் ஸ்ரீ துருவன் சேலம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் என்ற நிலையில், மகனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்த பெற்றோருக்கு, மகன் பாடப் புத்தகங்களை எடுத்துச் செல்ல புத்தகப்பை வாங்கிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. மிகுந்த சிரமத்திற்கிடையே பாட புத்தகங்களை பள்ளிக்கு எடுத்துச் சென்று கல்வி பயின்று வந்த மாணவன் ஸ்ரீ துருவனின் நிலையை கண்டு சேலம் டவுன் காவல் நிலைய குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன், தனது சொந்த செலவில் சம்பந்தப்பட்ட மாணவனுக்கு உதவ எண்ணியுள்ளார்.
அதன் அடிப்படையில் இன்று காலை பள்ளியின் இறை வணக்கம் நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் தனது சொந்த செலவில் வாங்கிய புத்தகப் பையனை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் முன்பு சம்பந்தப்பட்ட மாணவன் ஸ்ரீ துருவனிடம் வழங்கினார். இது இறை வணக்கம் நிகழ்வுக்காக நின்றிருந்த அனைத்து மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. மேலும் கல்வி தொடர்பான எந்த உதவியாக இருந்தாலும் தன்னிடம் கேட்குமாரும், தன்னால் இயன்றதை செய்வதாகவும் சம்பந்தப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் இறை வணக்க நிகழ்வின் போது தெரிவித்தது அனைவரையும் வியக்கச் செய்வதாகவே அமைந்திருந்தது.
தமிழக காவல்துறையில் இப்படியும் சில மனிதநேயம் கொண்ட அதிகாரிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்று பலரும் பேசியதை காதுபட கேட்க முடிந்தது. சேலம் மாநகர காவல் துறையின் சிறப்பு உதவி ஆய்வாளரின் இந்த செயலை சேலம் மாநகர காவல் துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பினையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.



0 coment rios: