நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாய் என தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி அறிவிப்பு.
இதுகுறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகளிடம் இருந்து தற்போது கொள்முதல் செய்யும் பாலுக்கு கட்டுப்படியான விலை இல்லை. பால் உற்பத்தி செய்ய பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் பராமரிப்பு செலவு பலமடங்கு உயர்ந்துள்ள காரணத்தை முன்வைத்து தவெக அரசு பால் கொள்முதல் விலையை தேர்தல் அறிக்கையில் கூறியது போல் உயர்த்தி வழங்க கோரி விவசாயிகள் சங்க அமைப்புகள் சார்பிலும் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பிலும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை முழுமையாக தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை, அதன் பின்னர் தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் இணைந்து கடந்த வாரம் 24.8.2026 முதல் தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்பாமல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. தவெக அரசு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் நலன் கருதி விரைவில் தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெறிவிக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் அனைவரும் இணைந்து பால் நிறுத்த போராட்டம் கைவிட வேண்டும் என அறிவிக்கப்பட்ட பின்னர் தற்காலிகமாக பால் நிறுத்தும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சங்க அமைப்புக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் இணைந்து நடத்திய போராட்டத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆவின் நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் இடம் இருந்து கொள்முதல் செய்யும் பால் தற்போது விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 ல் இருந்து கொள்முதல் விலையாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 விலை உயர்த்தி ரூ 39 என அறிவிப்பு வெளியிட்டு, அதனுடன் பால் கொள்முதல் விலையுடன் சேர்த்து ஊக்கத் தொகையாக ரூ.5 என நிர்ணயம் செய்து, பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என தமிழக முதல்வர் அவர்கள் இன்று அறிவிப்பு வெளியிட்டதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்பதாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R.வேலுச்சாமி செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.



0 coment rios: