சேலம்,
S.K. சுரேஷ் பாபு.
சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பெருவிழாவில் அம்மன் திருத்தேர் விழாவை ஒட்டி மாபெரும் அன்னதானம். அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம்.
சேலத்தில் உள்ள எட்டு பட்டிகளுக்கும் காவல் தெய்வம், நவகிரகங்களின் நாயகி மற்றும் கிரகண காலங்களில் திருக்கோவில் நடையை அடைக்காமல் சிறப்பு பூஜை மேற்கொள்ளும் திருத்தலம் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் ஆடி பெருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான அம்மனின் திருத்தேர் ஊர்வலம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவினை ஒட்டி கோட்டை பெரிய மாரியின் திருத்தேர் விழா பவணியை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கும் நிகழ்வுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநில இணை செயலாளர் வி கே ஆர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சேலம் மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
இந்த மகா அன்னதான விழாவில், தேசியத் தலைவர் குருஜி அருள்வேலன், கௌரவ தலைவர்கள் சுவாமி இராமானந்தா மற்றும் ஸ்ரீலஸ்ரீ தண்டபாணி தேசிகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஆடி பெருவிழாவில் சேலம் கோட்டை மாரி, சேலம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும் திருத்தேர் விழாவினை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானங்களை வழங்கி மகிழ்ந்தனர்.
காலை 10:30 மணி அளவில் தொடங்கிய இந்த மகா அன்னதானம் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அமைப்பின் சேலம் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா சரவணன், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் செவ்வாய் ஜே கே சுதன், எஸ் எஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை சேர்ந்த சரவணன் மற்றும் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.



0 coment rios: