செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான ஆணையத்திடம் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லுாரி சார்பில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான ஆணையத்திடம் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லுாரி சார்பில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான நீதியரசர் கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்துடன் இன்று சுமார் 2 மணி நேரம் உரையாடி ஆணவக்கொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கினர். இந்த விழாவில் ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு நீதியரசர் கே.என் பாஷா மற்றும் இவ்வாணையத்தின் உறுப்பினர்களான திரு. ராமநாதன் ஐபிஎஸ் திரு பழனிக்குமார் ஐஏஎஸ் மற்றும் நீதிபதி திரு ரவீந்திர போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை பெற்றுக்கொண்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலேயே முதல் கல்லூரியாக சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரி தங்களது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் பரிந்துரைகளை பெற்று இந்த ஆணையத்திடம் சமர்ப்பித்திருப்பது போற்றுதலுக்குரிய ஒரு சமூக பொறுப்புள்ள செயல் என்று பாராட்டி பேசினர்.
தொடர்ந்து ஆணவக்கொலைகளுக்கு எதிரான சட்டம் இயற்றுவதற்கான பரிந்துரைகள் மற்றும் ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஒரு மாதிரி சட்டம் அடங்கிய தொகுப்பினை சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் தலைவர் திரு.சரவணன் தனபாலன் அவர்கள் ஆணையத்திடம் வழங்கினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: