செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது. சேலம் அரியானூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர். சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது. அரியானூரில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர். 

தமிழக விவசாயிகளின் நலன் கருதி நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது  டி.வி.கே. கொடுத்த வாக்குறுதிகள் அமுல்படுத்துவதிலேயே பல்வேறு குளறுபடிகள். தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பை ஏமாற்றி முழுமையாக செயல்படுத்தவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். தமிழக விவசாயிகளின் நலன், கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்று பயிர் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் காவிரி உரிமை பங்கிட்டு நீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தஞ்சையில் நேற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களைக் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக ஏழு பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்பொழுது விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில் திரண்ட திமுகவினர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கழுதை கண்டித்து அரியானூர் சேலம் கோவை  தேசிய நெடுஞ்சாலையில்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர், ஆட்டையாம்பட்டி பேரூர் கழக செயலாளர் முருக பிரகாஷ், கல்வியாளர் அணி இணைச் செயலாளர் மலர்விழி வீரபாண்டி ராஜா, இளைஞர் அணி பொறுப்பாளர் ஃபிரண்ட்ஸ் ரமேஷ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியனுர் பகுதியில் டி வி கே தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொய் வழக்கு போட்டு கைது செய்த தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மறியல் போராட்டத்தின் போது வலியுறுத்தினர். இந்த போராட்டத்தின் காரணமாக அரியானூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் காணப்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: