செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக தமிழக முதல்வர் ஆர்வம் காட்டாமல், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன் ??? .தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு சரமாரி கேள்வி. இதுகுறித்து தமிழக விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டும் என்றும் முதல்வருக்கு வலியுறுத்தல்.

நாமக்கல்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக தமிழக முதல்வர் ஆர்வம் காட்டாமல்,  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுவது ஏன் ??? .
தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தமிழக முதலமைச்சருக்கு சரமாரி கேள்வி. இதுகுறித்து தமிழக  விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டும் என்றும் முதல்வருக்கு வலியுறுத்தல்.

தமிழக விவசாயிகளின் நலன் கருதி நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது  டி.வி.கே. கொடுத்த வாக்குறுதிகள் அமுல்படுத்துவதிலேயே பல்வேறு குளறுபடிகள். தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பை ஏமாற்றி முழுமையாக செயல்படுத்தவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். தமிழக விவசாயிகளின் நலன், கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்று பயிர் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் காவிரி உரிமை பங்கிட்டு நீர் பிரச்சனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தஞ்சையில் நேற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களைக் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக ஏழு பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்பொழுது விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் திமுகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ஆர்.வேலுச்சாமி, டி.வி.கே. தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியும்,  இதற்கான விளக்கத்தை கேட்டும் கண்டன பதிவு ஒன்றினை  வெளியிட்டுள்ளார். 
அந்த பதிவில்,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அரசு நாட்டின் முதுகெழும்பாக உள்ள தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருக காவிரி பங்கீட்டு உரிமை உயிர் தண்ணீரை  இந்த ஆண்டு முறையாக கர்நாடகா அரசிடம் இருந்து பெற்று தர தவெக அரசு தவறிவிட்டது. தவெக கட்சி தேர்தல் வாக்குறுதி படி தமிழக விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் தற்போது முறையாக நடக்கவில்லை, தமிழகத்தில் தற்போது கடுமையான வறட்சி தலை விரித்தாடுகிறது.
தமிழகத்தில் தவெக கட்சிக்கு வாக்களித்து ஆட்சி கட்டிலில் அமர வைத்த தமிழ்நாடு மக்களுக்கும் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க கோரி தற்போது தமிழகம் முழுவதும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நேரத்தில் செயல்படாமல் மௌன அரசாக இருந்து விட்டு, நாளை தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக எதிர்கட்சி தலைவர் குரல் எழுப்புவார் என்று அஞ்சி, நேற்று தஞ்சையில் திமுக சார்பில், காவிரி உரிமையில் தவெக அரசின் மெத்தன போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றதில் தமிழக எதிர்கட்சி தலைவர்  உதயநிதி ஸ்டாலினை,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவதூறாக பேசியதாக கூறி சினிமா பாணியில் நடப்பது போல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனை  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைக்காக  தமிழக முதல்வர் ஆர்வம் காட்டவில்லை மாறாக  எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் என்று விவசாயிகளுக்கு பதில் கூற வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் தனது கண்டன பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: