நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.
தமிழக விவசாயிகளின் நலனுக்காக கர்நாடக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்ததற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தொடர்ந்து கைது செய்வதா ? . தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R.வேலுச்சாமி கடும் காட்டம். இனி வரும் காலங்களில் கர்நாடகா அரசுக்கு எதிராக திட்டமிட்டப்படி தொடர் போராட்டம் தமிழகத்தில் நடைபெறும் என்றும் கர்நாகா அரசுக்கு சூளுரை.
இது குறித்து அவர் வெளிப்படுத்தியுள்ள காட்டமான பதிவில், கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை ஆண்டுதோறும் தொடர்ந்து காவிரியில் திறந்துவிட மறுத்து வருகிறது.மேலும் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டும் முயற்ச்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா அரசு தமிழ்நாட்டடில் எதிராக செயல்பட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் காவிரி மூலம் பாசன பகுதி சுமார் ஆண்டுக்கு 25,00,000 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது தற்போது கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடதாதல் தற்போது பான வசதி இல்லாம் விளை நிலங்கள் பயிர் செய்யமுடியாமல் பொய்த்து போய் முடங்கி கிடக்கிரது.
கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருவதை அதை முறியடித்து கண்டிக்கும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் எனது தலைமையில் ஆகஸ்ட் 15 ந் தேதி சுந்திர தினத்தின்று தமிழக உள்ள விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி இன்று மாலை 4 மணிக்கு சேலம் ரயில்வே ஜங்சன் பகுதியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதியில் இருந்து இரு மார்கமாக வரும் வந்தே பாரத் ரயிலை தடுத்து நிறுத்தி ரயில் மறியல் மறியல் போராட்டம் நடத்துவதாக இருந்த அறிவிப்பை அறிந்த தமிழ்நாடு காவல்துறையினர் இன்று நான் ஈரோடு எனது சொந்த வேலை காரணமாக இங்கு இருந்தால் இன்று காலை 10 மணிக்கு ஈரோடு சூரம்பட்டி காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னை மட்டும் கைது செய்யப்பட்டு ஈரோடு சூரம்பட்டி காவல்நிலையத்தில் வைத்துள்ளனர் என தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மயிலாடுதுறையில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மரித்து போராட்டம் மேற்கொள்ள இருந்த நிலையில் நான் தங்கி இருந்த விடுதியில் வைக்கப்பட்டதாக கூறிய வேலுச்சாமி, தொடர்ந்து இன்று நடைபெறுவிருந்த சேலத்தில் வந்தே பாரத் ரயில் மறியல் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கோடு தமிழ்நாடு காவல்துறை சதி செய்து முறியடித்தாதால் காவிரி விவகாரம் தொடர்பாக, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இனி வரும் காலங்களில் கர்நாடகா அரசுக்கு எதிராக திட்டமிட்டப்படி தொடர் போராட்டம் தமிழகத்தில் நடக்கும் என்பதை இந்த செய்தி குறிப்பின் வாயிலாக கர்நாகா அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்றும் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி சூளுரைத்துள்ளார்.



0 coment rios: