வியாழன், 3 செப்டம்பர், 2026

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா. அரசு தேர்வுகளில் 100% வெற்றி பெற உதவியாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா. அரசு தேர்வுகளில் 100% வெற்றி பெற உதவியாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மேதகு ஆயர் அருள்செல்வம் ராயப்பன் அவர்கள் தலைமையேற்று  பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் நூறு சதவீதம் வெற்றியைப் பெற்றுத் தந்த  ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் பாராட்டு தெரிவித்தார். 
ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவர் ரீகன், மாணவர் ரித்திக்,மாநில  தேசிய டேக்வாண்டோ  போட்டியிலும் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 
புதியதாக கட்டப்பட்ட சுகாதார கட்டிடத்தை மேதகு ஆயர் அவர்கள் திறந்து வைத்தார். அருட்பணி எட்வின் ஆயரின் செயலர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் அருட்பணி A. ஜோதி பெர்னாண்டோ அவர்களும், அருட்பணி A. டேவிட்  உதவி தலைமை ஆசிரியர் அவர்களும் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்கள்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: