வியாழன், 3 செப்டம்பர், 2026

ஈரோட்டில் இளையராஜாவின் இசை வெள்ளம்..! 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் பிரம்மாண்ட நேரடி இன்னிசை விழா


ஈரோட்டில் இளையராஜாவின் இசை வெள்ளம்..!

50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் பிரம்மாண்ட நேரடி இன்னிசை விழா

ஈரோடு, செப். 3:
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில், ஈரோடு டெக்ஸ்வேலியில் வரும் அக்டோபர் 25-ம் தேதி பிரம்மாண்டமான நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அருண் ஈவென்ட்ஸ் மற்றும் மெர்குரி நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பு ஈரோடு டெக்ஸ்வேலியில் நடைபெற்றது.

முக்கியஸ்தர்கள் பங்கேற்பு

நிகழ்ச்சியின் முக்கிய விளம்பரதாரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார், முழுநேர இயக்குநர் அனிதா சதீஷ் குமார், ஏற்றுமதி மற்றும் சில்லறை விற்பனை மேலாளர் சஞ்சய் சதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஃபார்ச்சூன் சிட்டி டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குநர் ராஜசேகர், செயல் இயக்குநர் டி.பி. குமார், இயக்குநர் உமா சேகர், தலைமை நிர்வாக அதிகாரி கோவர்த்தனன் ஆகியோரும் பங்கேற்றனர்.

எம்.சி.ஆர். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர்களான எம்.சி. ராபின், எம்.சி. ரிக்சன், பி.என்.ஐ. நிர்வாக இயக்குநர் மகேஷ் பி.வி. கிரி, ரெனாட்டஸ் ப்ரோகான் தலைமை நிர்வாக அதிகாரி பகலா வெங்கடேஷ், வால்யூம் ஸீரோ நிர்வாக இயக்குநர் ராஜாராம் முருகையா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


மேலும், பாண்டியன் எலக்ட்ரிக்கல்ஸ் & பைப்ப்ஸ் நிர்வாக இயக்குநர் எல்லாளன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேலம் மண்டலத் தலைவர் ராஜவேலு, பிராண்டிங் பீஸ் & கோ நிறுவனர் விக்னேஷ் வேலுசாமி, அனில் ஃபுட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிரபாகர் யுவராஜன், சர்வேஷ் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் தியா எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் பி.எஸ். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.

செந்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் பி.எஸ். கௌரி சங்கர், V சோடா மற்றும் 369 நிறுவனர் அருண் மாதேஸ்வரன், MJM கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் அவ்வை.ஆர். முருகன், யெஸ் ப்ரின்டிங்ஸ் உரிமையாளர் ஆனந்த் அர்தநாரீஸ்வர் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

50 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மாண்ட மேடை மற்றும் காட்சியமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

‘ஜெயிலர்’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, ‘விடுதலை’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிரம்மாண்ட அரங்குகள் மற்றும் காட்சியமைப்புகளை உருவாக்கிய கலை இயக்குநர் கிரண், இந்நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ளார்.

“இளையராஜாவின் இசைப் பயணத்தில் நாமும் பங்கேற்பது பெருமை”

நிகழ்ச்சி குறித்து மில்கி மிஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார் கூறுகையில், தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை ஈரோட்டில் கொண்டாடுவது பெருமைக்குரிய விஷயம் என்றும், வாழ்நாள் முழுவதும் அவரது இசைப் பயணத்தில் நாமும் பங்கேற்றிருப்பது சிறப்பான ஒன்று என்றும் தெரிவித்தார்.

டிக்கெட் விற்பனை தொடக்கம்

நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை சதீஷ் குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர்.

அக்டோபர் 25-ம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தற்போது entrypasses.com இணையதளத்தில் நடைபெற்று வருகிறது.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: