சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் திருமண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர் நவீன கால சீர்வரிசைகளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு..... எலைட் அசோசியேஷன் அமைப்பின் 46 ஆவது ஆண்டு படைப்பு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு.
இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி, இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள அணைத்து இந்துக்களும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் குறிப்பாக வட மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி பத்து நாட்களுக்கு மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றனர், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது, சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது, எலைட் அசோசியேஷன் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடி வருகின்றனர், ஒவொரு ஆண்டும் பல்வேறு வடிவங்களில் புராண இதிகாசங்கள் உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை அமைக்கபட்டு கொண்டாடி வருகின்றனர் குறிப்பகாக கைலாச கணபதி, செல்வகணபதி கண்ணாடி கணபதி, சங்கு கணபதி, பனிலிங்க கணபதி என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலையை பல லட்ச ருபாய் மதிப்பில் அமைக்கபட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக மூன்று நாட்கள் வைக்கபடுகிறது, அதே போல 46வது ஆண்டாக திருமண கோலத்தில் ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் பெருமான் திருமண மணி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாதிப்பது போல அலங்கராம் செய்யப்பட்டு இருந்தது மண்டபத்தின் நுழை வாயிலில் அரண்மனை முகப்பு போன்று அமைக்கபட்டு, பின்னர் உள்ளே நுழையும் போது வண்ணமிகு வரவேற்பு அலங்காரங்களுடன் வடிமைக்கபப்டு இருந்தது.
காண்பவரை பரவசத்தில் மட்டுமல்லாமல் மகிழ்ச்சியை ஏறபடுத்தி உள்ளது. மேலும் திருமண மணி மண்டபத்தின் விநாயகர் திருமண கோலத்தில் அமர்ந்திருந்து வேண்டியதை அளிக்கும் ராஜாவாக அமர்திருப்பது விண்ணுலகில் நடக்கும் காட்சிபோலவே மண்ணுலகில் அமைக்கபட்டு இருந்தது தத்ருபமாக காட்சி தருவது போல வடிவமைக்கபட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் திருக்கல்யாண வைபவத்தில் மணமக்களுக்கு சீர்வரிசை வழங்குவதை போன்று தற்காலத்திற்கு ஏற்றார் போன்று ஏசி, ரெஃப்ரிஜிரேட்டர், வண்ண தொலைக்காட்சி, நவீனரக மின்விசிறி, வாஷிங் மெஷின், இண்டக்ஷன் ஸ்டவ், பட்டுப்புடவைகள் வேட்டி சேலை, உட்பட தங்க ஆபரணங்கள், புறா தானே உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளும் சீர்வரிசைகளாக அடுக்கப்பட்டு இருந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் விதமாகவே அமைந்திருந்தது.
இந்த திருக்கல்யாண உற்சவ வைபவம் முதன்முதலாக விநாயகப் பெருமான் திருமண கோலத்தில் வீற்றிருப்பதை காண ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். இதுகுறித்து நிகழ்ச்சி அமைப்பாளர் சேகர் கூறும்போது, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு, 46 ஆண்டாக தங்களது எலைட் அசோசியேசன் சார்பில் திருமண கோலத்தில் சித்தி புத்தி விநாயகர் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான புராண விளக்கத்தையும் கூறிய அவர், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி வருகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இதிகாசங்கள் உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை அமைக்கபடும் அதே போல இந்த ஆண்டும் விண்ணுலகில் நடப்பது போலவே அமைந்திருந்தது.
பேட்டி: சேகர் எலைட் அசோசியேஷன் தலைவர்



0 coment rios: