ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

சேலத்தில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்.

சேலத்தில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளை மற்றும் அன்னபூர்ணா மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில்  மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிறுவனத் தலைவர் தனபால் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் கோல்டு தேவராஜ் மற்றும் ரவிவர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இலவச பொது மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர். சேலம் அன்னபூர்ணா மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்ட இந்த பொது மருத்துவ முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் பொன்னம்மாபேட்டை அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்று சென்றனர். இந்த பொது மருத்துவ முகாம் குறித்து புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் தனபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களின் நலனுக்காகவே  கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து விதமான சேவைகளை பொதுமக்களுக்கு செய்து வருவதாகவும், தற்பொழுது இரண்டாவது ஆண்டாக இந்த பொது மருத்துவம் முகாம் நடத்தி வருவதாக தெரிவித்தார். தனியார் அமைப்புகளின் சார்பில் பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்கள் இருந்தாலுமே கூட தற்பொழுதும் சாலையில் ஆதரவின்றி தவித்து வரும் பொது மக்களின் நலன் கருதி விரைவில் தங்களது அமைப்பின் சார்பில் இலவச சேவை ஆதரவற்றோர் இல்லம் தொடங்குவதே தங்களது அமைப்பின் தலையாய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் இதற்கு தமிழக அரசு தங்களுக்கு போதுமான ஒத்துழைப்பும் உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் தனபால் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 
இந்த பொது மருத்துவ முகாமில் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் அன்பு சரவணன் ரமேஷ் மணிவண்ணன் சரவணன் சாந்தகுமார் சாரதி சின்னத்தம்பி மற்றும் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: