திங்கள், 7 செப்டம்பர், 2026

சேலம் அருகே நிகழ்ந்து கொண்டிருக்கும் மணல் கொள்ளையை தடுக்க அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பாஜக நிர்வாகிகள் பரபரப்பு.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலம் அருகே நிகழ்ந்து கொண்டிருக்கும் மணல் கொள்ளையை தடுக்க அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த பாஜக நிர்வாகிகள் பரபரப்பு. 

சேலம்
சன்னியாசி குண்டு விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகின்றார். இந்த நிலையில் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு புகார் மனு ஒன்றினை இன்று நடைபெற்ற சேலம் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு மனு வழங்குவதற்காக வந்திருந்தார். இதற்கென ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் டவுன் காவல் துறையினர் மற்றும் சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மீட்பு படை குறையினர் பரபரப்பிற்கு உள்ளாகினர். இதுகுறித்து அவரிடம் விசாரிக்கையில் தான் புகார் மனு கொடுப்பதற்காக வந்துள்ளதாகவும் பலமுறை புகார் தெரிவித்தும் அரசுத்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக கண்களில் கருப்பு துணி கட்டி புகார் மனு அளிக்க வந்துள்ளதாக கூறியதன் அடிப்படையில் நிலைமை அங்கு சற்று கொஞ்சம் நிம்மதி அடைந்தது. சேலம் சன்னியாசி குண்டு பகுதியைச் சேர்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் தனது புகார் மனுவில், 
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம், மாசிநாயக்கன்பட்டி ஏரி அருகிலுள்ள காட்டுவளவு பகுதியில் இயங்கி வரும் பிளாஸ்டிக்/ஸ்டிக் பேப்பர் உருக்கும் ஆலை மற்றும் தேங்காய் ஓடு எரிக்கும் ஆலை தொடர்பாக,  சுற்றுச்சூழல் விதிமீறல், விவசாய நிலங்கள் மற்றும் ஏரிக்கு பாதிப்பு, தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமை மற்றும் தேவையான அரசு அனுமதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்புடையது அவரது கோரிக்கை மனுவும். அந்த கோரிக்கை மனுவில் பூபதி என்பவர் குறிப்பிட்டுள்ளதாவது, சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் பகுதியில் உள்ள மாசிநாயக்கன்பட்டி ஏரி அருகிலுள்ள காட்டுவளவு பகுதியில், சீனிவாசன் என்பவர் பிளாஸ்டிக்/ஸ்டிக் பேப்பர் உருக்கும் ஆலை மற்றும் தேங்காய் ஓடு எரிக்கும் ஆலையை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஆலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் பிற பொருட்கள் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கும், மாசிநாயக்கன்பட்டி ஏரிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும், கழிவுகள் ஏரியில் கலக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள், விவசாயப் பயிர்கள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி சம்பந்தப்பட்ட புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: