திங்கள், 7 செப்டம்பர், 2026

சேலம் ஆத்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீடான இரண்டு ஏக்கர் நிலத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு சரவணன் என்பவருக்கு போலி பட்டா மூலம் விற்பனை செய்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் ஆத்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீடான இரண்டு ஏக்கர் நிலத்தை லஞ்சம் பெற்றுக் கொண்டு சரவணன் என்பவருக்கு போலி பட்டா மூலம் விற்பனை செய்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள  ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவர் தனது குடும்பத்தாருடன் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அந்த புகார் மனுவில், விவசாயியான தனக்கு மனைவி மற்றும் மகன்கள் மகள்கள் உள்ளனர். மகன்களுக்கும் மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமத்தில்  குத்தகை மற்றும் அனுபவத்தின் மூலம் நான் சுமார் 4 ஏக்கர் விவசாய நிலத்தை நிர்வகித்து வருகிறேன். அதே நிலத்தில் வீடு கட்டி, எனது மனைவி துளசி மற்றும் மகன்கள் பாலமுருகன், தர்மர் ஆகியோருடன் வசித்து விவசாயம் செய்து வருகிறேன். ராமநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரின் மனைவியான கனகம் என்பவர், நான் தான் அவருடைய கணவர் என்று பொய்யான தகவலைக் கூறி எனக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார். 
தற்போது முல்லைவாடி கிராமத்திcன் கிராம நிர்வாக அலுவலராக (VAO) உள்ள மேற்கூறிய கனகம், எனக்குச் சொந்தமானதும் நான் 50 ஆண்டுகளாக அனுபவத்தில் வைத்திருப்பதுமான ராமநாயக்கன்பாளையம் வடக்கு 9-ல் உள்ள விவசாய நிலத்திற்கு, போலியான பட்டா (பட்டா எண் 1109) மற்றும் ஆத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 1370/2025-ன் கீழ் ஒரு பத்திரப் பதிவையும் தயார் செய்துள்ளார். இதன் மூலம் அவர் எனது நிலத்தைக் அபகரிக்க முயற்சிக்கிறார். மேற்கூறிய நிலம் 50 ஆண்டுகளாக எனது அனுபவத்தில் உள்ளது என்பது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், எனக்குப் படிப்பறிவு இல்லாததால், எனது நிலம் வேறொருவர் பெயரில் 'அ' பதிவேட்டில் (A-Register) பதிவு செய்யப்பட்டது குறித்த விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. எனது அறியாமையைப் பயன்படுத்தி, மேற்கூறிய கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த முறையற்ற செயலைச் செய்துள்ளார்.
மேற்கூறிய பட்டா மற்றும் உரிமைப் பத்திரத்திற்குத் தேவையான அசல் ஆவணங்கள் அல்லது அனுபவ ஆதாரம் எதுவும் அந்த நபரிடம் இல்லாதபோதிலும், கிராம நிர்வாக அலுவலர் பணம் பெற்றுக்கொண்டு எனக்கு அந்தப் பட்டாவை வழங்கியுள்ளார். எனது நிலத்தை நேரில் வந்து அளக்காமலும், எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், மோசடியான போலியான பட்டாவைப் பயன்படுத்தி நிலத்தைப் உட்பிரிவு (subdivision) செய்து எனக்கு வழங்கியுள்ளார்.  மேற்கூறிய போலியான பட்டாவை ரத்து செய்யவும், அந்தப் போலியான பட்டாவை வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் (VAO) கலைச்செல்வன் மற்றும் நிலத்தை உட்பிரிவு செய்த நில அளவர் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் பணிவுடன் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி குழந்தைவேலு நம்மிடையே கூறுகையில், வரும் 19ஆம் தேதி பட்டா நிலத்திற்கான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வர சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளதாகவும், தங்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் வேதனையுடன் விவசாய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: