சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகராட்சி ஏழாவது கோட்டத்திற்கு உட்பட்ட அய்யந்திருமாளிகை பகுதியில் ஹாண்ட் ஃபாகிங் இயந்திரம் கொண்டு கொசு மருந்து அடித்து டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்ட துணை மேயர்.... பொதுமக்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கிய சாரதாதேவி மாணிக்கம்.....
தமிழகத்தில் தற்போது அதி தீவிரமாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர துணை மேயரும், சேலம் மாநகராட்சி 7 வது கோட்ட மாமன்ற உறுப்பினருமான திருமதி சாரதாதேவி மாணிக்கம், தனது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர டெங்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், டெங்கு பாதிப்புக்கு உள்ளான பகுதியான சேலம் அய்யந்திரு மாளிகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர டெங்கு கண்காணிப்பு பணியினை மேற்கொண்டார்.
அப்பொழுது சேலம் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இருக்கும் பொழுது யாரும் எதிர்பாராத வகையில், கொசு மருந்து புகை அடிக்கும் இயந்திரமான ஹேண்ட் பாகிங் இயந்திரத்தை தானே இயக்கி, கொசுக்களை ஒழிக்கும் இயந்திரத்தை கையில் எடுத்து புகையை அடித்தார். இது சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை மட்டுமல்லாது அந்தப் பகுதி பொதுமக்களையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
இது குறித்து சேலம் மாநகராட்சி துணை மேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம் நம்மிடையே கூறுகையில், எங்கு பரவலை கட்டுப்படுத்த தனது ஏழாவது கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போதுமான பணியாளர்களைக் கொண்டு காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் கொசு மருந்து வெளிப்படுத்தும் இயந்திரம் மற்றும் வாகனங்களை கொண்டு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தனது கூட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதற்கென போதுமான மருத்துவர்களும் மருந்து பொருட்களும் தேவையான அளவு இல்லை இருப்பு உள்ளதோடு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் திருமதி சாரதா தேவிமாணிக்கம் தெரிவித்தார்.



0 coment rios: