திங்கள், 28 செப்டம்பர், 2026

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தமிழக உழவர்களின் கோரிக்கைகள் குறித்து செவி சாய்து கேட்காமலும் யாரையும் சந்திக்காமல் தமிழகத்தில் ஆட்சி நடத்துவதுதான் தவெக அரசின் சாதனை. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி விமர்சனம். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்றும் சூளுரை...

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு.

இது தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில், 
தவெக அரசு கர்நாடகாவில் இருந்து உரிய நேரத்தில் உரிய காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் பெற்று தராமல் டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்தது தவெக அரசு. தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றம் செய்தது தவெக அரசு. தவெக கட்சியை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிற்கு அமருவதற்கு  வாக்களித்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற சொல்லி தினந்தோறும் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறைகளை கலத்தில் இறங்கி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் செவி சாய்து கேட்காமலும், யாரையும் சந்திக்காமல் தமிழகத்தில் ஆட்சி நடத்துவதுதான் தவெக அரசின் சாதனை. 
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரு தொகுதியிலும் தவெக கட்சியை தோற்கடிக்க வேண்டும் என இடைதேர்தல் நடைபெறவுள்ள அந்த பகுதி வாக்காளர்களுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த செய்தி குறிப்பு அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: