சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
உலக இதய தினத்தை முன்னிட்டு VIMS மருத்துவமனையில் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதய நோய்களைத் தடுப்பதன் முக்கியத்துவம், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் முதன்மை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் போற்றுதலுக்குறிய திரு மீனாட்சிசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.
VIMS மருத்துவமனையின் துணை மருத்துவ இயக்குநர் டாக்டர் அசோக் மற்றும் துணை நிர்வாக அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ச்சியான சுகாதார விழிப்புணர்வு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தும் சிறப்பு வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் முதன்மை இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவசுப்பிரமணியம் மற்றும் VIMS மருத்துவமனையின் மூத்த மருத்துவர்களான டாக்டர் ஆனந்த், டாக்டர் விக்னேஷ், டாக்டர் தீபன், டாக்டர் அஸ்வின் ராம், டாக்டர் கலையரசன், டாக்டர் யுவராஜ், டாக்டர் சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அனைத்து மேலாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் இதில் பங்கேற்றனர்.
இதய சிகிச்சைத் துறையைச் சேர்ந்த செவிலியர்கள் மற்றும் மாணவர்கள், இதயம் தொடர்பான வினாடி-வினா நிகழ்ச்சி மற்றும் நோயாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன. VIMS மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்குவதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. VIMS மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் நீலவேணி, செவிலியர் உதவி கண்காணிப்பாளர் கலைச்செல்வி, மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த உமா தினேஷ், சந்தைப்படுத்தல் மேலாளர் அருள்மணி மற்றும் அவரது குழுவினர், பொறுப்பாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்கள், நோயாளிகள் எனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
VIMS சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையானது இதயவியல் (Cardiology), சிறுநீரகவியல் (Nephrology), நரம்பியல் (Neurology), எலும்பியல் அறுவை சிகிச்சை (Orthopedic Surgery) மற்றும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (Trauma, Accident and Emergency Care) உள்ளிட்ட முக்கிய மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறது.



0 coment rios: