சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
பணியாளர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்தும் இச்சுற்றறிக்கைகள் ரத்து செய்யப்படாத பட்சத்தில், 01.11.2026 முதல் காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம். சேலம் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் தமிழக அரசுக்கு அறிவிப்பு.
இது குறித்து சேலம் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மாவட்ட மேலாளர், டாஸ்மாக் (TASMAC) அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், வரும் 01.11.2026 முதல் காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் மற்றும் மறுசுழற்சி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள இச்சுற்றறிக்கைகள், பணியாளர்களுக்கு மிகுந்த பணிச்சுமையை ஏற்படுத்துகின்றன. எனவே, டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தாமல், தனியார் முகமை (Private Agency) மூலம் பணியாளர்களை நியமித்து, காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும், தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளைச் செயல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
பணியாளர்களுக்குத் தொடர்ந்து பணிச்சுமையை ஏற்படுத்தும் இச்சுற்றறிக்கைகள் ரத்து செய்யப்படாத பட்சத்தில், 01.11.2026 முதல் காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று சேலம் மாவட்ட
டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க சேலம் மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை வழங்குவதற்காக சேலம் சந்தியூரில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு சென்று இருந்த நிலையில் அந்த கோரிக்கை மனுவை ஏற்க மறுக்காத சேலம் மாவட்ட மேலாளர், ஜம்பு என்கின்ற தொழிற்சங்க நிர்வாகியை வலுக்கட்டாயமாக கெங்கவல்லி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பாகவே தற்பொழுது வரை காத்துக் கொண்டிருக்கின்றனர். தங்களது கோரிக்கைகள் ஏற்காத வரை குறிப்பாக ஜம்பு என்பவரை மீண்டும் சேலத்திலேயே பணி மாற்றம் செய்யும் வரை தங்களது காத்திருப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



0 coment rios: