வெள்ளி, 30 அக்டோபர், 2026

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் எதிரொலி. வரும் இரண்டாம் தேதி நடக்க விருந்து கள்ளிறக்கும் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு. போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,
S.K.சுரேஷ்பாபு.

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் எதிரொலி. வரும் இரண்டாம் தேதி நடக்க விருந்து கள்ளிறக்கும் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு. போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, மறைந்த மாபெரும் விவசாயத் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாநிலத் தலைவர் ஆர்.வேலுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் வளரும் தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து பெறப்படும் 'கள்' விற்பனை மீதான தடையை நீக்கக் கோரி, வரும் 02.11.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  அலுவலகங்களுக்கு முன்பாக 'கள்' விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்படும் என்று நான் அறிவித்திருந்தேன் என்றும் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதால், தென்னை மரங்களில் தேங்காய்கள் முதிர்ச்சியடைவதற்குத் தேவையான சீரான வெப்பநிலை கிடைக்காத சூழல் நிலவுகிறது ஆகையால், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் வழிகாட்டுதலில் இயங்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக, திங்கட்கிழமை, 02.11.2026 அன்று காலை 10.00 மணிக்கு நடத்தப்படவிருந்த, தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து பெறப்படும் 'கள்' விற்பனை செய்யும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 
மேலும்  இந்தப் போராட்டம் நடைபெறும் புதிய தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு தெரிவித்துக் கொள்வதாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: