வெள்ளி, 2 அக்டோபர், 2026

மூலப் பொருட்களின் விலை உயர்வால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு ..!


மூலப்பொருட்கள் விலை உயர்வால் பேப்பர் கோன் தொழில் கடும் பாதிப்பு..!

கிராப்ட் போர்டு விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – உற்பத்தியாளர்கள் கோரிக்கை..!

ஈரோடு : 03 அக்
இன்டர்சியல் பேப்பர் கோன்ஸ் மற்றும் டியூப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், சங்க செயலாளர் கே.குப்புசாமி தலைமையில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நூல் கோன், நூல் மற்றும் துணி குழாய்கள், பட்டாசு குழாய்கள், பேப்பர் தட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக கிராப்ட் போர்டு பயன்படுத்தப்படுகிறது. 

இதனை தயாரிக்க பயன்படும் பழைய அட்டை பெட்டிகள் மற்றும் பழைய கோன்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழைய அட்டை பெட்டிகளின் விலையும் உயர்ந்துள்ளதால், கிராப்ட் போர்டு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது, இதன் காரணமாக கிராப்ட் போர்டு விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


இதுகுறித்து சங்க தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் குப்புசாமி, பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் கூறியதாவது:

“பழைய அட்டை பெட்டிகள், பழைய கோன்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனுடன் விறகு மற்றும் கெமிக்கல் உள்ளிட்ட உற்பத்திக்குத் தேவையான பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் கிராப்ட் போர்டு விலை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.”


இதன் காரணமாக பேப்பர் கோன் மற்றும் டியூப்களின் உற்பத்திச் செலவு அதிகரித்து, அவற்றின் விலையை உயர்த்தி விற்பனை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


இந்த தொழிலை நம்பி ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ள நிலையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
எனவே, பேப்பர் கோன் மற்றும் டியூப் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் கிராப்ட் போர்டின் விலையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இந்த தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: