சேலம்,
S.K. சுரேஷ் பாபு.
கால்நடை பராமரிப்பு மற்றும் விலங்கு நலத்துறை ( SPCA ) அதிகாரி எனக்கூறி மாட்டு வியாபாரிகளை குறி வைத்து பண வசூல் வேட்டையில் ஈடுபடும் சேலத்தைச் சேர்ந்த பலே கில்லாடி. கலக்கமடைந்துள்ள மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தைக்கு வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட போலி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக முதலமைச்சருக்கு வைக்கும் முதன்மையான கோரிக்கை.
கால்நடை பராமரிப்பு மற்றும் விலங்கு நலத் துறையில் SPCA என்பதன் விரிவாக்கம்:
Society for the Prevention of Cruelty to Animals
தமிழில் இது விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் அல்லது விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சங்கம் என்று அழைக்கப்படுகிறது.
கைவிடப்பட்ட, காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட விலங்குகளை மீட்டு அவற்றிற்குத் தேவையான கால்நடை மருத்துவச் சிகிச்சை அளிப்பது,
விலங்குகளைத் துன்புறுத்துபவர்கள் மீது சட்டப்படி (Prevention of Cruelty to Animals Act) நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக்கமாகும்.
பொதுமக்களிடையே விலங்குகள் மீதான அன்பு மற்றும் பொறுப்பான நல்வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
இந்தியாவில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தச் சங்கம் (District SPCA) மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தான் இந்த அமைப்பை சார்ந்தவர் என்று கூறி, சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தைக்கு வரும் மாட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வாகனங்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி ஒவ்வொரு வாகனத்துக்கும் 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை முறைகேடாக பணம் பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் அல்லாமல் சேலம் பைபாஸ் வழியாக கேரளாவிற்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் வாகனங்களையும் தடுத்து நிறுத்தி வாகனத்திற்கு ஏற்றார் போல் பணம் வசூலிப்பது இவரது கூடுதல் ஸ்டைல்.
அதுமட்டுமல்லாமல், தான் Spca அமைப்பைச் சார்ந்தவர் என்றும் சற்று தொலைவில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கூறுவதோடு, விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் உதவி செய்வதை போல் நடித்து பணம் கரப்பதும் இவரது வாடிக்கையாகவே உள்ளது. தனி மனிதராக வலம் வரும் பெருமாள் என்பவர் உண்மையிலேயே spca அமைப்பைச் சார்ந்தவர் தானா ? , இல்லை இந்த அமைப்பின் பெயரைச் சொல்லி போலியாக சட்டவிரோதமாக பணம் வசூலில் ஈடுபடுகிறாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் வியாபாரிகளும் விவசாயிகளும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்பது மட்டும் நிதர்சனம். மேலும் மாட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெருமளவு படிப்பறிவு இல்லாதவர்கள் என்ற ஒற்றை காரணத்தை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாகவும் அதிரடியாகவும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் சேலத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கொண்டலாம்பட்டியில் இருந்து மின்னாம்பள்ளி வரை செல்லும் பைபாஸ் சாலையில், குறிப்பாக, சீலநாயக்கன்பட்டி மேம்பாலம் ஏறி இறங்கும் பகுதி, எருமாபாளையம் பகுதி எஸ் ஜே பிளாசா பகுதி, உடையாபட்டி ஜே சி பி முனியப்பன் கோவில் பகுதிகள் ஆகியவை பெருமாள் என்பவர் வாகனங்களை தடுத்து நிறுத்தி பண வசூல் வேட்டையில் ஈடுபடும் பகுதியாக நிர்ணயித்துள்ளார்.
இப்படி முறைகேடாகவும், சட்டவிரோதமாகவும் ஏன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் இந்த அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறிக் கொள்ளும் பெருமாள் என்பவர், தனக்கு நெருக்கடியான நிலை என்று அவர் நினைக்கும் போது எப்படி சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து மாயமாகின்றார் என்பது தற்பொழுது வரை புரியாத புதிராகவே உள்ளது. ஆகவே இவர் அந்த அமைப்பைச் சார்ந்த நபர் என்பது மட்டும் இல்லை என்பது ஊர்ஜிதம் ஆகிறது. மேலும் spca அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறுவதோடு, இவரது பண மோசடிக்கு காவல் துறையினரும் உடந்தையாக இருக்கின்றனரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தைக்கு தங்களது கால்நடைகளை விற்பனை செய்வதற்காக வரும் நலிவடைந்த விவசாய பெருமக்களிடம் கேட்டபோது,
சேலத்திற்கு அருகில் மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தைக்கு தங்களது கால்நடைகளை விற்பனை செய்வதற்காக வரும்பொழுது இடையில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் என்றும் காவல்துறையினர் என்றும் கூறி தங்களிடம் கால்நடைகளை துன்புறுத்துகிறீர்களா என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் கேரளாவிற்கு இறைச்சிக்காக அனுப்பப்படுகிறதா என்று தங்களை மிரட்டி ஒவ்வொரு வாகனத்திற்கும் தல 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் மிரட்டி பணம் வசூல் செய்வதாக வேதனை தெரிவித்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஒவ்வொரு முறையும் மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தைக்கு தங்களது கால்நடைகளை சூழ்நிலைக்காக விற்பனை செய்வதற்காக வரும்போது இது போன்ற இடையூறுகள் தங்களுக்கு மிக பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்தனர். உழவுத் தொழில் நலிவடைந்து வரும் நிலையில் தங்களது கால்நடைகளை விற்றாவது பிழைப்பு நடத்தலாம் என்று இதுபோன்று சந்தைகளுக்கு கொண்டு வரும்போது அதிகாரிகள் என்ற பெயரை கூறி மிரட்டுவது மட்டுமல்லாமல், தங்களிடம் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி என்று கூறுபவர் அவர் உண்மையிலேயே அந்த துறையில் தான் இருக்கின்றாரா என்ற சந்தேகமும் தங்களுக்கு உள்ளதாக வருத்தம் தெரிவித்த விவசாயிகள் ஒரு வண்டிக்கு 2000 ரூபாய் முதல் மூன்று ஆயிரம் ரூபாய் என்று வைக்கும் பட்சத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் இந்த மின்னாம்பள்ளி மாட்டு சந்தைக்கு சேலம் மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஏராளமான வாகனங்களில் தங்களது கால்நடைகளை ஏற்றி வரும் பட்சத்தில் அந்த அதிகாரி என்று கூறும் நபரின் அன்றைய தின வருமானம் என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் இதனை இந்த அமைப்பிற்கு தலைவராக உள்ள சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழக முதலமைச்சரும் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து நலிவடைந்து அடுத்த கட்ட நகர்விற்காக தங்களது கால்நடை விற்க வரும் விவசாயிகளின் நலனை பேணி காக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களது கோரிக்கை என்றும் தெரிவித்தனர். ( பேட்டிகள் )
நாம் விசாரித்த வரை, தற்பொழுது வரை எந்த ஒரு மாட்டு வியாபாரியோ விவசாயியோ பண வசூல் வேட்டையில் ஈடுபடும் பெருமாள் என்பவர் மீது எந்த ஒரு புகார் பதிவு செய்யப்படவில்லை என்பது கூடுதல் தகவலாகவே உள்ளது. சேலம் மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தைக்கு வரும் மாட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை மட்டுமே குறிவைத்து பண வசூல் வேட்டையில் ஈடுபடும் பெருமாள் என்பவர் மீது இந்த அமைப்பின் தலைவராக செயல்படும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பாரா, தொடர் பாதிப்புகளை சந்தித்து வரும் விவசாய பெருமக்களின் நலனில் அக்கறை செலுத்துவாரா மாவட்ட ஆட்சித் தலைவரும், தற்பொழுது புதிதாக பொறுப்பேற்று விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தனி கவனம் செலுத்தி இந்த பண மோசடியில் ஈடுபடும் அதிகாரியின் மீது அதிகப்படியான தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது மட்டுமே விவசாய பெருங்குடி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.



0 coment rios: