S.K. சுரேஷ்பாபு.
இந்திய திருநாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயிர் செய்வதற்கான பயிர் கடன் உச்ச வரம்பு ரூ.2,00,000/- என்பது போதுமானதாக இல்லை. இனிவரும் காலங்களில் பயிர்க் கடன் உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி, பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
மத்திய நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை பயிர் செய்வதற்கு தேசிய வங்கிகளில் பயிர் கடன் வரம்பை ரூ.2,00,00/- ஆக நிர்ணயம் செய்துள்ளது என்று பதிவிட்டுள்ள அவர், தற்போதைய சூழ்நிலையில் வேளாண் இடுபொருட்களின் விலை வெளிச்சந்தையில் பல மடங்கு உயர்ந்துள்ள காரணத்தால் விவசாயிகள் பயிர் செய்வதற்கான பயிர் கடன் உச்ச வரம்பு ரூ.2,00,000/- என்பது போதுமானதாக இல்லை. மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயிர் செய்யும் பயிர்களைக் கணக்கீடு செய்து, அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் பயிர்க் கடன் உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



0 coment rios: