திங்கள், 2 நவம்பர், 2026

சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராக, பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில இணை செயலாளர் சத்ரிய சேகர் நியமனம். பாமக தலைவர் போற்றுதலுக்குரிய டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திருமதி சௌமியா அன்புமணிக்கும் மனமார்ந்த நன்றி..

சேலம், 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராக, பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில இணை செயலாளர் சத்ரிய சேகர் நியமனம். பாமக தலைவர் போற்றுதலுக்குரிய டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திருமதி  சௌமியா அன்புமணிக்கும் மனமார்ந்த நன்றி..

பசுமைத்தாயகம் அமைப்பின் மாநில இணை செயலாளர் சத்திரிய சேகர் சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராக மத்திய அரசு ரயில்வே துறை நிர்வாகம் நியமித்துள்ளது. இதற்கு புதிதாக சேலம் கோட்டை ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள சத்திரிய சேகர், இதற்கு
பாசமிகு பாமக தலைவரும், வழிகாட்டியுமான அண்ணன் சின்னையா அவர்களுக்கும்,தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும் பசுமை தாயகம் தலைவருமான, அன்பிற்குரிய அண்ணியார் அவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராகச் (Salem Division DRUCC Member) செயல்படும் ஒரு சிறப்பான வாய்ப்பையும், பொறுப்பையும் எனக்கு வழங்கிய தங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகளையும், பணிவான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையையும், அளித்துள்ள இந்தப் பொறுப்பையும் மிகுந்த மரியாதையுடனும், கடமையுணர்வுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தப் பொறுப்பை வெறும் பதவியாகக் கருதாமல், சேலம் மாவட்ட மக்களின் ரயில்வே தொடர்பான தேவைகள், பயணிகளின் நலன் மற்றும் சேலம் ரயில்வே கோட்டத்தின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை உரிய இடத்தில் எடுத்துரைத்து, மக்கள் நலனுக்காக நேர்மையுடனும், முழு அர்ப்பணிப்புடனும் செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன். தாங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது செயல்பாடுகளின் மூலமாக நிச்சயம் பெருமை சேர்ப்பேன்.
சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக எனக்கு வாய்ப்பு வழங்கிட பரிந்துரை செய்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் கார்த்தி அவர்களுக்கும்,
மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
அன்புடனும் நன்றியுடனும்,
சத்ரியசேகர். சி. பெ.
மாநில இணை செயலாளர். பசுமைத்தாயகம்.
உறுப்பினர்,
சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: