செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில் தர்ணா போராட்டம் இன்று (6ம் தேதி) நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வ.பன்னீர்செல்வம் கோரிக்கை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மேனாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் சிறப்புரை ஆற்றினார்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் அனுப்பும் மனுக்கள் மீது காப்பீடு நிறுவனம், கருவூலக் கணக்கு ஆணையர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை. சரியான வழிகாட்டுதல் இன்மையால் மருத்துவ காப்பீட்டுத் தொகையை முழுமையாக பெற இயலாமல் ஓய்வூதியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றனர். எனவே, முழுமையாக செலவுத் தொகையை பெற்றிட காசு இல்லா மருத்துவம் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேர்தல் கால வாக்குறுதி படி 70 வயதினை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 விழுக்காடு ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 அனைவருக்கும் வழங்கிட வேண்டும். ஓய்வூதியத்தை தொகுத்து தரும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் விஜயமனோகரன், அரசு போக்குவரத்துக் கழக பெற்றோர் நல அமைப்பு மண்டலத் தலைவர் ஜெகநாதன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் மணிபாரதி, அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் குப்புசாமி, அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்க கோட்டச் செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் தர்ணாவில் கலந்து கொண்டனர். முடிவில், அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வரும் 10ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் வரும் 10ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (6ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 10ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் ஒரு இடத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை,குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

அதன்படி, ஈரோடு வட்டத்தில் சித்தோடு விளையாட்டு மாரியம்மன் கோவில் நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், பெருந்துறை வட்டத்தில் கருக்கம்பாளையம் நியாய விலைக் கடையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் சின்னியம்பாளையம், முத்துக்கவுண்டன்பாளையம் (கிராமம்) நியாய விலைக் கடையில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் நடக்கிறது. 

அதேபோல, கொடுமுடி வட்டத்தில் கொளத்துப்பாளையம் நியாய விலைக் கடையில் ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் புஞ்சை துறையம்பாளையம் நியாய விலைக் கடையில் கோபி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நம்பியூர் வட்டத்தில் நம்பியூர்-1 நியாய விலைக் கடையில் சின்னப்புலியூர் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும், பவானி வட்டத்தில் புன்னம்-2 நியாய விலைக் கடையில் மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) தலைமையிலும் நடைபெற உள்ளது. 

மேலும், அந்தியூர் வட்டத்தில் மூங்கில்பட்டி நியாய விலைக் கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் கூத்தம்பாளையம், குத்தியாலத்தூர் (கிராமம்) நியாய விலைக் கடையில் ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும், தாளவாடி வட்டத்தில் கெட்டவாடி நியாய விலைக் கடையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் நடக்கிறது. 

எனவே, நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (7ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (7ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (7ம் தேதி) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின் பாதை (காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- குமலன்குட்டை பேருந்து நிறுத்தம், பாலக்காடு. பெருந்துறை ரோடு, வி.ஐ.பி.காலனி, திரு.வி.க.வீதி மற்றும் ராணாலட்சுமணன் நகர்.

புஞ்சை புளியம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- புஞ்சைபுளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், காரப்பாடி, நல்லூர், கனவுக்கரை, செல்லப்பம்பாளையம், ஆலாம்பாளையம், ராமநாதபுரம், சுள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம் மற்றும் வெங்கநாயக்கன்பாளையம்.

பவானிசாகர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம்புதூர், கணபதி நகர், சாத்திரக்கோம்பை, ராமபயலூர், புதுப்பீர்கடவு, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், ரெட்டூர் மற்றும் பகுத்தபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17.30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 18 மாற்று திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள். தொகுதி மேம்பாட்டு நெடில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் வழங்கினார்.

17.30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 18 மாற்று திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள். தொகுதி மேம்பாட்டு நெடில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் வழங்கினார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

17.30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம்... தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் வழங்கினார். 

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் சூரமங்கலத்தில் உள்ள மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. 2022-2023 நிதி ஆண்டில் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கும், 2023-2024 நிதியாண்டில் 13 இரு சக்கர வாகனங்களுக்கும் மொத்தம் 18 இருசக்கர வாகனங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நெறியில் இருந்து, ஒரு வாகனத்திற்கு 96,011 ரூபாய் என 17,28,198 லட்ச ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு, சேலம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளால் இருசக்கர வாகனத்தை இயக்க முடியுமா என வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு அவர்களுக்கான வாகனங்கள் வழங்கப்பட்டது. பின்னர் வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், மெதுவாகவும் பாதுகாப்பாகவும் செல்ல வேண்டும் என்றும் என்றும் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அறிவுரை வழங்கினார். அப்போது ஒரு மாற்றுத்திறனாளி கடந்த 20 வருடங்களாக மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று இரு சக்கர வாகனங்களுக்கு மனு செய்து, தற்பொழுது வரை கிடைக்க வில்லை என்றும் தாங்கள்தான் எனக்கு இருசக்கர வாகனம் பெற்று தந்தீர்கள் என்று கண்ணீர் மல்க சட்டமன்ற உறுப்பினருக்கு சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி நன்றி தெரிவித்தார். இதற்கு தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து இன்னும் எத்துனை வண்டிகள் வேண்டுமானாலும் தங்களுக்கு பெற்று தருகிறேன் என்று சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியை சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் ஆசுவாசப்படுத்தினார். 
சேலம் மாநகர் மாவட்ட பாமக தலைவர் கதிர் ராசரத்தினம், மாவட்ட அமைப்பு செயலாளர்கள் சரவண கந்தன், சிட்டி வேல்முருகன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் தங்கராஜ் ரத்தினவேல் ஈஸ்வரன் நடராஜ் சிவகுமார் சமயவேல் கலைவாணன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார் ஓடிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இருசக்கர வாகனங்களை பெற்றுக்கொண்டு சட்டமன்ற உறுப்பினர் இரா அருளுக்கு தங்களது நன்றினை தெரிவித்து சென்றனர்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

மக்களைத் தேடி மருத்துவம்: ஈரோடு மாவட்டத்தில் 3.59 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை

மக்களைத் தேடி மருத்துவம்: ஈரோடு மாவட்டத்தில் 3.59 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை கடந்த 2021 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இத்திட்டமானது, ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் முதலான நோய்கள் தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதில், மாவட்டத்தில் 2021-2024 வரை 18,22,061 பரிசோதிக்கப்பட்டு அவற்றில் புதிதாக 3,05,946 இரத்தக்கொதிப்பு நோயாளிகள், 1,37,767 சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வலி நிவாரண சிகிச்சை 8,607 பயனாளிகள் மற்றும் இயன்முறை சிகிச்சை மூலமாக 26,160 பயனாளிகள் சிகிச்சை பெற்று தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் கருப்பை வாய் புற்று நோய் 1,16,238 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவற்றில் புதிதாக 457 நோயாளிகளும், மார்பக புற்றுநோய் பரிசோதனையானது 2,43,205 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவற்றில் 551 நோயாளிகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 4ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா 9 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தினை வழங்கினார்.

தொடர்ந்து , 16 மக்களைத் தேடி மருத்துவ வட்டார வாகன அணிவகுப்பை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவ சுகாதார ஆய்வாளர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்கள், இயன்முறை சிகிச்சை மற்றும் வலிநிவாரண சிகிச்சை அலுவலர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் 48 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை, 9 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் வழங்கினார்.

மேலும், 9 மருத்துவ குழுக்கள் மூலம் மருத்துவம் முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு இரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், நடமாடும் நம்பிக்கை மையத்தின் புதிய வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் நாரணாவாரே மனிஷ் சங்கர்ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அம்பிகா சண்முகம், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) செந்தில்குமார், துணை இயக்குநர் (குடும்ப நலம்) கவிதா, மாநகர நல அலுவலர் பிரகாஷ், மாவட்ட திட்ட மேலாளர் துரைசாமி, மாவட்ட தொற்றாநோய் பிரிவு அலுவலர் சோமசுந்தரம் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்: 220 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்: 220 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (5ம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டமானது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, சக்கர நாற்காலி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 220 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

பெருந்துறையில் முதன்முறையாக எந்திர விலங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி துவங்கியது..!

பெருந்துறையில் முதன்முறையாக எந்திர விலங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி துவங்கியது..!


பெருந்துறையில் முதன்முறையாக எந்திர விலங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜே.கே என்கிற ஜெயக்குமார் அவர்களும் பெருந்துறை பேரூராட்சி தலைவர் ஓ சி வி ராஜேந்திரன் அவர்களும் திறந்து வைத்தனர்.

தினேஷ்குமார் முன்னிலையில், ஜெயபிரகாஷ், வக்கீல் சுவாமிநாதன், பிசி முத்துச்சாமி, செந்தில்குமார், வைஸ் சேர்மன் சண்முகம், இன்ஃப்ராடெக் சக்தி கேபி சாமி ,கே பி எஸ் மணி ,கல்யாண சுந்தரம் ,சம்பத்,ex.mla பொன்னுசாமி முருகசாமி, சரஸ்வதி, பேரூராட்சி கவுன்சிலர்கள் போன்ற பல்வேறு முக்கிய நபர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.. 

இப்பொருாட்சியை பற்றி அதன் உரிமையாளர் தினேஷ் குமார் கூறும்போது...

இங்கே டைனோசர், கொரில்லா, பாண்டா, டைகர் ,ஆப்பிரிக்கன் யானை ,சிங்கம் ,கரடி, அனகோண்டா பாம்பு, போன்ற விலங்குகள் ராட்சச வடிவில் மக்களை கவரும் வண்ணத்தில் ரோபோடிக் முறையில் தத்ரூபமாக உள்ளது என்றும் பிரம்மாண்டமான ராட்சச ராட்டினங்கள், உணவு அரங்குகள், பேய் வீடு ,பிரேக் டான்ஸ் ,கொலம்பஸ், பேன்சி பலூன், ஜம்பிங் நெட் ,டிராகன் டிரெயின் ,மற்றும் முக்கியமாக சாகச வீராங்கனைகள் செய்யும் மரணக்கிணறு மக்களை  ஆச்சரியத்தில் மூழ்கும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளோம்.. 

மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களையும், 40 விதமான வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளையும், பல்வேறு உணவு அரங்குகளையும் உள்ளே அமைத்துள்ளோம். வரும் நபர்களுக்கு மிகச்சிறந்த முறையில் வாகன வசதிகளும் ஏற்பாடு செய்துள்ளோம்.. 

இப்பொருட்காட்சியானது 1/8/ 2024 முதல் 8 /9/ 2024 வரை மாலை 4 மணி முதல் இரவு 9:30 மணி வரை தொடர்ந்து நடைபெற இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் ..இங்கு வரும் மக்கள் குடும்பத்துடன் ரசித்து மகிழ இது ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமில்லை என தெரிவித்தார்.. வந்திருந்த அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் உதயகுமார் மற்றும் நாசர் நன்றி கூறினார்.