சனி, 17 ஆகஸ்ட், 2024

சேலம் மாவட்ட வனத்துறையில் எழுந்துள்ள சாதிய வன்கொடுமைகள் குறித்து முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சேலம் மாவட்ட வனத்துறையில் எழுந்துள்ள சாதிய வன்கொடுமைகள் குறித்து முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மாவட்டம்- வன துறையில் எழந்துள்ள சாதிய வன் கொடுமைகளை தடுக்க வேண்டும், அதிகார துஷ்பிரயோகத்தை முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி ( Principal Chief Conservator of Forest - Cjennai ,) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.*....... *தமிழ்நாடு மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை SC / ST ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தல்.

தமிழ்நாடு மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை SC / ST ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவி வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், 
சேலம் வன துறையில் பணியாற்றும் SC/ ST ஊழியர்களுக்கு பதுகாப்பு இல்லை. குறிப்பாக பட்டியலின பெண் ஊழியர்களுக்கு கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஏற்புடையதல்ல. இங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியர் திருமதி. விழியரசி என்கிற பட்டியலின பெண் ஊழியருக்கு இங்கு பணியாற்றி வரும் மீனா ( Forester) மற்றும் இதர சாதி இந்து காவலர்கள் , அதிகாரிகள் கடந்த ஒரு வருடமாக மிகுந்த தொல்லை கொடுத்தும், சாதிய  வன்கொடுமையும் செய்து வருவதாக புகார் அளித்துள்ளார். இந்த பெண் ஊழியர்  வன்கொடுமை  குறித்து மேல் நிலை அதிகாரிகள் அறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சரியபட வைக்கின்றது. பணி புரியும் இடத்தில் பெண் ஊரியர்களுக்கு பாதிப்பு, வன்கொடுமை, தொல்லை கொடுப்பது சட்டபடி  குற்றம். மாநில பெண்கள் ஆணையம் விசாரணைக்கு உட்பட்டது.இதைவிட பெரிய கொடுமை.
பாதிக்கபட்ட பெண் பட்டியலின ஊழியர் திருமதி . விழியரசி ( காவலர் ) நமது உழியர்கள் கூட்டமைப்பில் புகார் அளித்த வகையில் இந்த பெண் வன்கொடுமை, சாதிய வன்கொடுமை குறித்து கடந்த 14-08-2024 நாளில் சம்மந்தபட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு புகார் கடிதம் அளிக்கபட்டது. முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில்  பாதிக்கபட்ட பெண் பட்டியலின ஊழியர் கயல்விழிக்கு இடம் மாற்றம் அளிக்கபட்டுள்ளது என்பது கொடுமை. குற்றம் சாட்டபட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது இதுவரை நடவடிக்கைகள் இல்லை என்பது உயர் அதிகாரிகளின்( DFO/ CF) மீது நம்பிக்கை இழக்கபடுகின்றது. சேலம் மாவட்டம்- வன துறையில் எழந்துள்ள சாதிய வன் கொடுமைகளை தடுக்க வேண்டும், அதிகார துஷ்பிரயோகத்தை முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி ( Principal Chief Conservator of Forest - Cjennai ,) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கபட்ட பட்டியலின ஊழியர்  திருமதி. விழியரசிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதனை கண்டிக்கும் விதமாக இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட அனைத்து சேலம்  வன துறை அதிகாரிகள்,/  ஊழியர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அனைவரையும் உடனடியாக இடம் மாற்றம் அல்லது தற்காலிக பணி நீக்கம் செய்து பிறகு விசாரணை செய்யபட வேண்டும். விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வன துறை மாவட்ட அலுவலகம் முன்பு நமது கூட்டமைப்பு  சார்பாகவும்   பல்வேறு கூட்டு நடவடிக்கை குழவும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானிக்கபட்டுள்ளது என்றும் சரஸ்ராம் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) பல்வேறு பகுதிகளில் மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) பல்வேறு பகுதிகளில் மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) திங்கட்கிழமை மேட்டுக்கடை, சூரியம்பாளையம், பெரியாண்டிபாளையம், சிப்காட் -II மற்றும் பூனாச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுக்கடை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மேல்திண்டல், கீழ்திண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுத்தானந்தன்நகர், லட்சுமிகார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜிகார்டன், வேப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், மாருதிநகர், வித்யாநகர், வில்லரசம்பட்டி நால்ரோடு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர், கதிரம் பட்டி, வண்ணான்காட்டுவலசு, தொட்டிபாளையம் மற்றும் சிந்தன்குட்டை.

சூரியம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ராயபாளையம், சித்தோடு, சுண்ணாம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, செல்லப்பம்பாளையம், குமிளம்பரப்பு, மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரிநகர், பாலாஜிநகர், எஸ்.எஸ்.டி.நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர், சேவாக்கவுண்டனூர் மற்றும் வேலன் நகர்

பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ்.

சிப்காட் - II துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம் மற்றும் காசிபில்லாம்பாளையம்.

பூனாச்சி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பூனாச்சி புறநகர், குருவரெட்டியூர், பூசாரியூர், முகாசிப்புதூர், சமயதாரனூர். கெம்மியம்பட்டி, செல்லாயூர், தொப்பபாளையம், ஆனைக்கவுண்டனூர், பி.கே.புதூர், தண்ணீர் பந்தல், செம்முனிசாமிகோவில் மற்றும் பாலமலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2.57 கோடி மோசடி: ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஷூ ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் புகார்

ரூ.2.57 கோடி மோசடி: ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஷூ ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் புகார்

ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபால் (வயது 60). இவர் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (17ம் தேதி) இரவு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் தோல் பதனிடும் ஆலை மற்றும் வெளிநாடுகளுக்கு ஷூ ஏற்றுமதி செய்யும் தொழிலை ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு 35 வருடங்களாக செய்து வருகிறார்.
இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலை விரிவுபடுத்துமை வகையில் ராணிப்பேட்டையில் ஷூ ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கி பரமகுரு, முருகன், கோபி, ஜமுனா, தணிகைவேல் உள்ளிட்ட நபர்களின் மேற்பார்வையில் தொழிலை செய்து வந்தேன்.

கடந்த 2020ல் சிறுநீரக பிரச்னை ஏற்பட்டு, 2021ல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், ராணிப்பேட்டைக்கு சென்று தொழிலை கவனிக்க முடியவில்லை. இதனால், நிறுவனத்தில் பணியாற்றிய பரமகுரு, கோபி, ஜமுனா மற்றும் தணிகைவேல் ஆகியோர் நிர்வகித்து வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து தொழிற்சாலைக்கு சென்று பார்த்த போது தன்னுடைய அனுமதி இல்லாமல் வேறு ஒருவர் பெயரில் வெளிநாடுகளுக்கு ஷூ ஏற்றுமதி செய்து கொண்டு இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த நிலையில், ஏற்றுமதி செய்த ஷூ குறித்த கணக்குகளை சரிபார்த்த போது ரூ.2 கோடியே 57 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

எனவே, என்னை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட பரமகுரு, கோபி, ஜமுனா, தணிகைவேல், பசீர், மகாலட்சுமி மற்றும் முருகேசன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.