ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

தமிழக வெற்றி கழகம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்றும் கட்சியின் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியதை வரவேற்றும் சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.

தமிழக வெற்றி கழகம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்றும் கட்சியின் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியதை வரவேற்றும் சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.

சேலம்.
S.K. சுரேஷ்பா

தமிழக வெற்றி கழகம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்றும் கட்சியின் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியதை வரவேற்றும் சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை திரைப்பட நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து கட்சி கொடியை அறிமுகப்படுத்தி, மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று தமிழக வெற்றி கழகம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தும் மாநாடு நடத்துவதற்கான அனுமதியை விழுப்புரம் காவல்துறையினர் வழங்கி நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக முறையில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி  வணிகவளாகம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு உற்சாகமாக கொண்டாடினர். அப்போது பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக பேருந்துகள் ஆட்டோக்கள் சாலையோரம் கடைகள் என அனைத்து தரப்பு மக்களிடமும் இனிப்புகளை வழங்கி தங்களது கட்சி அங்கீகரிக்கப்பட்டதை கொண்டாடினர். தமிழக வெற்றி கழகம் கட்சி அங்கீகரிக்கப்பட்டதாக மாவட்ட தலைவர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மத்தியில் பேசிய போது மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சனி, 7 செப்டம்பர், 2024

ஈரோட்டில் உதவுவது போல் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.30 ஆயிரம் திருடியவர் கைது

ஈரோட்டில் உதவுவது போல் ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.30 ஆயிரம் திருடியவர் கைது

ஈரோடு பெரியசேமூர் கருப்பராயன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). சுமைதூக்கும் தொழிலாளி. இவர், கடந்த 28ம் தேதி ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது, ராமசாமிக்கு பணம் எடுக்க தெரியாததால், அருகில் இருந்த நபரிடம் ஏடிஎம் கார்டையும், ரகசிய எண்ணையும் கூறி ரூ.1,500 பணம் எடுத்து தர சொல்லி கேட்டுள்ளார். அதற்கு அந்த நபரும் ஏடிஎம் கார்டினை வாங்கி, வங்கியில் இருப்பு உள்ள பணத்தை அறிந்து தெரிந்து கொண்டு, ராமசாமிக்கு ரூ.1,500ஐ எடுத்து கொடுத்தார்.

பின்னர், ராமசாமியின் ஏடிஎம் கார்டுக்கு பதில் அவரது ஏடிஎம் கார்டினை மாற்றி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து, அந்த நபர், ராமசாமியின் ஏடிஎம் கார்டினை பயன்படுத்தி ரூ.30 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து, ராமசாமி ஈரோடு வடக்கு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

இதன்பேரில், ஏடிஎம் மையத்தில் உதவி செய்வது போல நடித்து, ஏடிஎம் கார்டினை மாற்றி கொடுத்து பணம் திருடியது நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குப்பண்டாபாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் செந்தில்குமார் (வயது 36) என்பதும், அவர் தற்போது ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே அண்ணா நகரில் வசித்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து, செந்தில்குமாரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.


அந்தியூர் அருகே அரசு பேருந்தை வழிமறித்து ரகளை செய்த போதை ஆசாமிகள் கைது

அந்தியூர் அருகே அரசு பேருந்தை வழிமறித்து ரகளை செய்த போதை ஆசாமிகள் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கள்ளிமடைக்குட்டைக்கு கே2 அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை பெருந்தலையூரை சேர்ந்த கருணாகரன் (வயது 52) என்பவர் ஓட்டினார். நடத்துநராக ரங்கசாமி (வயது 46) என்பவர் இருந்தார்.
இந்நிலையில், அந்தியூரை அடுத்த பாறையூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பேருந்தை வழி மறித்தனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்து செல்ல நேரமாகிறது. ஓரமாக நின்று பேசுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதற்கு, அவர்கள் 2 பேரும் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் ரகளையில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தைகளாலும் திட்டியதோடு, கைகளால் அடித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் ரகளையில் ஈடுபட்டவர்கள் அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த சார்லஸ் (வயது 34), ஆசிரியர் காலனியை சேர்ந்த லியோ சகாயமுத்து (வயது 25) ஆகிய 2 பேர் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.