சனி, 7 டிசம்பர், 2024

காசநோய் இல்லா ஈரோடு மாவட்டமாக உருவாக்க 100 நாட்களுக்கு தீவிர காசநோய் முகாம்கள்

காசநோய் இல்லா ஈரோடு மாவட்டமாக உருவாக்க 100 நாட்களுக்கு தீவிர காசநோய் முகாம்கள்

ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று (டிச.7) முதல் 100 நாட்களுக்கு தீவிர காசநோய் விழிப்புணர்வு, கண்டுபிடிப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காசநோய் இல்லா ஈரோடு மாவட்டம் உருவாக்கும் திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு வாகனத்தினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது, வருகின்ற 2025 வருடத்திற்குள் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் காசநோய் இல்லா ஈரோடு மாவட்டம் உருவாக்கும் விதமாக விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின் நோக்கமானது புதிய காசநோய் தொற்று உள்ளவர்கள் கண்டுபிடிப்பை தீவிரப்படுத்தி முனைப்பை ஏற்படுத்துவது, காசநோயினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைப்பது மற்றும் புதிய காசநோயாளிகள் உருவாகுவதை தடுப்பது ஆகும்.

அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டுபிடிப்பு முகாம்கள் இன்று (டிச.7) முதல் அடுத்த ஆண்டு 2025 மார்ச் மாதம் 22ம் தேதி வரை தொடர்ந்து 100 நாட்களுக்கு நடத்தப்பட்டு காசநோய்க்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

மேலும், இம்முகாம்களில் நவீன பரிசோதனை கருவிகளைக் கொண்டு சளி பரிசோதனை மற்றும் ஊடுகதிர் பரிசோதனை போன்ற காசநோய்க்கான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.


காசநோய் ஒரு உயிர் கொல்லி நோய். இது காற்றின் மூலம் பரவும் சமுதாய வியாதியாகும். காசநோய்க்கான அறிகுறிகள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேற்ப்பட்ட சளியுடன் கூடிய இருமல், மாலை நேரக்காய்ச்சல், இரவில் வியர்த்தல், பசியின்மை, உடல் எடை குறைவு, சளியுடன் கூடிய இரத்தம், நெஞ்சு வலி போன்றவைகள் ஆகும்.

காசநோயாளிகளுடன் வசிப்பவர்கள் மற்றும் சமூகத் தொடர்பில் இருப்பவர்கள், கட்டுப்படாத சர்க்கரை நோய் உள்ளவர்கள், பல்வேறு உடல் பிரச்சனைகளால் உடல் மெலிந்து பலவீனமானவர்கள் காசநோய்க்கான பரிசோதனைகளை மேற்க்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

ஆகவே, ஈரோடு மாவட்ட பொது மக்கள் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவராக இருப்பின் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் நடைபெறும் காசநோய் இல்லா ஈரோடு மாவட்டம் உருவாக்க சிறப்பு தீவிர காசநோய் கண்டுபிடிப்பு முகாம்களை அணுகலாம் .

மேலும், தங்கள் வீடு தேடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி இலவச காசநோய்க்கான பரிசோதனைகளை மேற்க்கொண்டு தங்கள் இன்னுயிரை பாதுகாத்துக் கொண்டு, காசநோய் இல்லா ஈரோடு மாவட்டம் உருவாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், காசநோய் இல்லா ஈரோடு உருவாக உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (காசநோய்) மரு.ராமசந்திரன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணாதேவி, துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.ரவீந்திரன், துணை இயக்குநர் (குடும்பநலம்) மரு.கவிதா உயர் அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா.. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா.. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

சேலம்.

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா.. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  நான்காவது பட்டமளிப்பு விழா  கல்லூரியின் வள்ளியப்பா கலையரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் வள்ளியப்பா அவர்கள் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள்  சொக்கு வள்ளியப்பா மற்றும்  தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். lஇந்த விழாவில்,  தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர்  ஆர்.ராஜேந்திரன் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் கதிரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக் கொண்டனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் காதர் நவாஸ் அனைவரையும் வரவேற்று நிகழ்த்திய இந்த நிகழ்வில், 
சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர், துணைத்தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்து கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் 2021-2024 ஆம்  கல்வியாண்டில் பயின்ற 968 மாணவர்களுக்கும், முனைவர் பட்டம் பெற்ற  பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
kசோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் வள்ளியப்பா பேசும் பொழுது அன்பிலே நண்பனை வெற்றி கொள், களத்திலே எதிரியை வெற்றிகொள், பண்பிலே சபையை வெற்றி கொள் என்ற கண்ணதாசன் வரிகளுக்கு ஏற்ப நல்ல கல்வியே நற்பண்புகளை வளர்க்கும், நற்பண்பே நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும், அத்தகைய நற்பண்பும், நல்வாழ்க்கையும் பெற கல்வியே பிரதானமாக இருக்கிறது. அத்தகைய கல்வியைப் பெற்ற மாணவர்களே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். நல்சமுதாயத்தை உருவாக்க காத்திருக்கும்  மாணவர்களுக்கு வாழ்த்துகள் என வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.10000/- இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.7500/- மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.5000/- மற்ற தர வரிசை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.3000/-  என மொத்தம் ரூபாய் 2,00,000 வழங்கி கௌரவிக்கப்பட்டது. பல்கலைக்கழக அளவில்   உயிர் தொழில் நுட்பவியல் மற்றும் காட்சித்தொடர்பியல், நிதியியல் மற்றும் கணக்கியல், உளவியல்,கணிதவியல் ஆகிய துறை மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். தொடர்ந்து நான்காவது  முறையும் உயிர் தொழில் நுட்பவியல் துறை சார்ந்த மாணவர்கள் , காட்சித்தொடர்பியல்  மாணவர்கள்  தங்கப்பதக்கம் மற்றும் முதல் பத்து இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதில்  நிதியியல் மற்றும் கணக்கியல், உளவியல்rr ஆகிய துறைகள் ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே  மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரியது ஆகும்.
பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் சிறப்பிடம் பெற்ற 43 மாணவர்களுக்கு சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில்  ரூ.2,00,000/- மதிப்பிலான தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் தர வரிசையில் இடம் பெற ஊன்றுகோலாய் இருந்த  துறைகளுக்கு    ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மொத்தம் ரூபாய் 9,00,000  மாணவர்களுக்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2021-2024 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றதுடன் பட்டம் பெற்ற  மாணவர்களும் தனிச்சிறப்புடன் கூடிய முதல்நிலை பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது போற்றுதலுக்குரியது. 
பட்டமளிப்பு விழாவின் நிறைவாக கல்லூரியின் முதல்வர் உறுதிமொழி வாசிக்க தாங்கள் கற்ற கல்வி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் என்றும் உறுதியுடன் செயல்படுவோம் என்று மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
ஈரோட்டில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி துவக்கி வைத்த அமைச்சர்

ஈரோட்டில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி துவக்கி வைத்த அமைச்சர்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியினை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு விவிசிஆர் நகரில் உள்ள குறிஞ்சி கலையரங்கில, ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் ஈரோடு மாவட்ட சதுரங்க சர்கில் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் தலைமையில், நடந்த இப்போட்டியியினை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி போட்டியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ பிரகாஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கே டி சேந்தன் புகழ், மண்டல தலைவர் குறிஞ்சி தண்டபாணி, மாநில விவசாய அணி செயலாளர் குறிஞ்சி சிவக்குமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ். எல்.டி சச்சிதானந்தம், மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பி.எஸ் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ் எஸ் விஜயராஜன் உட்பட மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள், திமுகவின் மாநில, மாவட்ட, மாநகர பகுதி ஒன்றிய, பேரூர், வார்டு கழகச் செயலாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள 7, 9, 11,13, 17 வயதுக்குட்பட்ட இருபால் சிறுவர் சிறுமியர்கள், ஓபன் பிரிவில் வயது வரம்பின்றி போட்டிகள் நடத்தப்பட்டன, இதில் பங்கேற்ற 250 சிறுவர், சிறுமியர்கள் இளைஞர்கள், இளைஞிகள், பெரியவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை இந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சுழல் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும், இப்போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் இணை செயலாளரும், ஈரோட்டில் விளையாட்டு நாயகனுமான டாக்டர் எஸ் ரமேஷ் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சேலம் குறிஞ்சி மருத்துவமனையில் தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மையம் துவக்க விழா.

சேலம் குறிஞ்சி மருத்துவமனையில் தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மையம் துவக்க விழா.

சேலம். 

சேலம் குறிஞ்சி மருத்துவமனையில் தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மையம் துவக்க விழா. 

சேலம் மாணவர்கள் கடந்த 20 ஆண்டுகால பயணத்தில் சிறப்பான சுகாதார சேவைகளை வழங்கி வரும் சேலம் குறிஞ்சி மருத்துவமனையில் மற்றொரு மயில் கல்லான நம்மை காக்கும் 48 எனும் தமிழக அரசின் என்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேலம் மாவட்டத்திலேயே முதல் முறையாக தமிழக அரசால் சிகிச்சை மையத்தை துவங்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால சிகிச்சை மையம் முக்கியமாக சாலை விபத்து நடந்த முதல் 48 மணி நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் விரிவான கவனிப்பை வழங்குவதற்காக துவங்கப்பட்டுள்ள இந்த அவசர பிரிவு துவக்க விழாவிற்கு மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும்  மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிமாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மான வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த இலவச அவசர சிகிச்சை மையத்தினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பொதுமக்களின் நலனுக்காக அர்ப்பணித்தார். 
இந்த சிகிச்சை மையம் குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மணிமாறன் நம்மிடையே கூறுகையில், இந்த இலவச சிறப்பு மையத்தின் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி அவசியம் சிறந்த உயர்தர சிகிச்சையை உறுதி செய்வதையும் மேலும் உயிர்களை காப்பாற்றுவதையும் நோக்கமாக கொண்டவை என்றும், மேலும் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசர சிகிச்சை திறன்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அவசர சிகிச்சை மையத்தில் இலவசமாக முதல் கட்ட சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அல்லது தங்களது மருத்துவமனையிலோ மேல் சிகிச்சையை தொடரலாம் என்றும் இதற்கு அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறந்த சலுகையில் சிகிச்சை என்றும் தெரிவித்தார். 
இந்த துவக்க விழாவில் மாணவரின் முக்கிய பிரமுகர்கள் மருத்துவர்கள் மருத்துவமனை நிர்வாகிகள் என திரளானூர் கலந்து கொண்டனர்.