புதன், 15 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்

எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக ஜன.10ம் தேதி, 13ம் தேதி மற்றும் 17ம் தேதி ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த 10ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று 3 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, 13ம் தேதி நடந்த வேட்புமனு தாக்கலின் போது, 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, நாளை (ஜன.17ம் தேதி) வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் கடைசி நாளான நாளை வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, நாளை மறுநாள் (ஜன.18ம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜன.20ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பிப்.5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8ம் தேதி பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது: மாநகராட்சி அறிவிப்பு

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது: மாநகராட்சி அறிவிப்பு

வால்வு பழுதனதால் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று (ஜன.15) புதன்கிழமை மதியம் முதல் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையாளர் மனிஷ்.என் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாநகராட்சியின் வரதநல்லூர் ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வரும் பிரதான நீரேற்று குழாயில் இருந்து சூரியம்பாளையம் குடிநீர் சேகரிப்பு தொட்டிக்கு செல்லும் வால்வு பழுதினை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால், இன்று (ஜன.15ம் தேதி) மதியம் முதல் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது. பழுது நீக்கம் சரிசெய்யப்பட்டவுடன் படிப்படியாக குடிநீர் விநியோகம் சீர்செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முழு ஆதரவு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முழு ஆதரவு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முழு ஆதரவு. 

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி துவங்கியது. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, பாஜக இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது. கோபி அருகே உள்ள ஓடத்துறையைச் சேர்ந்த மா.கி.சீதாலட்சிமி வேட்பாளர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்டு இருந்த  அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர்) போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முழு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி அறிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சியின் அரசியல் பிரிவு மாநில தலைவர் பழ. முரளிதரன் தலைமையில், அவருடன் இணைந்து  வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய தீவிர பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவில் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி தெரிவித்துள்ளார்.