வெள்ளி, 11 ஏப்ரல், 2025

சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம். மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம். மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம். மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம். 

சேலம் கிழக்கு மாவட்ட திமுக  இளைஞரணி ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சேலம் மாவட்டம் வாழப்பாடி நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுக கூட்டத்தில், துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் வீரபாண்டி பிரபு, வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர் வீரபாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு கூட்டத்தில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நகர ஒன்றிய பேரூர் ஆகியவற்றிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட  அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை நியமித்த கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்ட ன. மேலும் இந்த அறிமுக கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் பேசுகையில் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ளது பொறுப்பாளர்கள் மற்றும் துணை பொறுப்பாளர்களுக்கு  இடையே எந்த விதமான சூழ்நிலையிலும் காழ்ப்புணர்ச்சி என்பது வந்துவிடக் கூடாது என்றும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற எண்ணம் ஒருபோதும் இருக்கக் கூடாது இருவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்து திரும்பிய நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வீட்டில் 234 தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவித்த எஸ் ஆர் சிவலிங்கம், அந்த வெற்றியை உறுதி செய்ய சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியோடு இணைந்து பணியாற்றும் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து கட்சியின் தலைமை கழக பேச்சாளர் பிரசன்னா மற்றும் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் துணை பொறுப்பாளர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கமாக விளக்கி கூறினர்.

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ரூ.3 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்: செயற்பொறியாளர் உள்பட 2 பேரிடம் விசாரணை!

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ரூ.3 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்: செயற்பொறியாளர் உள்பட 2 பேரிடம் விசாரணை!

ஈரோடு மாவட்ட மாவட்ட அலுவலக வளாகத்தில் பழைய கட்டிடத் தின் 4-ம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் செயற்பொறியாளராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேகர் (வயது 52) என்பவரும், களப்பணி மேற்பார்வையாளராக சுரேஷ் மணி (வயது 48) என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அலுவலகத்தில், ஒப்பந்ததாரர்களிடம் அரசு பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக, ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விரைந்து சென்று 4-வது மாடியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒப்பந்ததாரர் ஒருவர், 500 ரூபாய் நோட்டு கட்டாக ரூ.3 லட்சம் ரூபாய் கொண்ட பையை 4வது மாடியில் கொடுத்துவிட்டு வேகமாக கீழே இறங்கி வந்தார். அந்த கைப்பை களப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் மணியிடம் இருந்த போது, கண்காணிப்பில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், செயற்பொறியாளர் சேகர், களப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் மணி ஆகியோர் அரசு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் 7.5 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ.3 லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, செயற்பொறியாளர் மற்றும் களப்பணி மேற்பார்வையாளர் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.