திங்கள், 5 மே, 2025

முதிய தம்பதி படுகொலையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

முதிய தம்பதி படுகொலையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளாங்காட்டுவலசு பகுதியில் முதிய விவசாய தம்பதி ராமசாமி, பாக்கியம் ஆகியோர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான திமுக அரசை கண்டித்தும், விளக்கேத்தி நான்கு சாலை சந்திப்பில் இன்று (மே.5) ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கே.எஸ்.தென்னரசு, பாலகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் வீரக்குமார் ஒன்றிய செயலாளர்கள் மயில் சுப்பிரமணி, செல்வராஜ், கதிர்வேல், கலைமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தியும், தி.மு.க அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.
ஈரோடு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதார் கார்டுகளை தரையில் போட்டு இறப்பு சான்றிதழ் கேட்ட மக்கள்!

ஈரோடு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதார் கார்டுகளை தரையில் போட்டு இறப்பு சான்றிதழ் கேட்ட மக்கள்!

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதார் கார்டுகளை தரையில் போட்டு இறப்பு சான்றிதழ் கேட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே.5) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் கலெக்டரை சந்தித்து தங்களது பிரச்சினைகள் குறித்து மனுக்களை வழங்கினர்.

அப்போது, ஆர்.என்.புதூர், காசிபாளையம் கிராமம் அன்னை தெரேசா நகரை சேர்ந்த மக்கள் சிலர் கையில் ஆதார் அட்டையுடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் திடீரென ஆதார் அட்டையை தரையில் போட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, நாங்கள் மேற்கொண்ட முகவரியில் கடந்த 18 வருடங்களாக எவ்வித அடிப்படை வசதி இன்றி வசித்து வருகிறோம். இங்கு சுமார் 60 குடும்பங்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுடன் வசித்து வருகிறோம்.

எங்களுடைய அடிப்படை வசதிகள் குறித்து பலமுறை உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் இங்கு வாழும் வயதானவர்கள், குழந்தைகள் பாம்பு மற்றும் பூச்சிகளுக்கும் பயந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆதார் கார்டு, ரேஷன் அட்டை போட்டு உரிமம் என எதுவும் எங்களுக்கு தேவையில்லை. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லாத காரணத்தால் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். எங்களுடைய ஆதாரங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறோம்.

இங்கு வாழும் 60 குடும்பத்தினரும் இறந்துவிட்டதாக கருதி இறப்பு சான்றிதழ் அளித்து விடுங்கள், இல்லை என்றால் இங்கு வாழும் 60 குடும்பங்களுக்கும் இலவச பட்டா மற்றும் அடிப்படை வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர். இதை அடுத்து அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று கூறினர்.
சேலத்தில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நிர்வாகி விஜய பானு என்பவரின் வளர்ச்சியை சீர்குலைக்க செந்தில்குமார் பல கோடி ரூபாய் அபகரித்து, நிகழ்த்திய சதி வலையே கைது நடவடிக்கைக்கு காரணம். விஜயபானுவின் அறக்கட்டளை வழக்கறிஞர்கள் பகிரங்க குற்றச்சாட்டு........

சேலத்தில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நிர்வாகி விஜய பானு என்பவரின் வளர்ச்சியை சீர்குலைக்க செந்தில்குமார் பல கோடி ரூபாய் அபகரித்து, நிகழ்த்திய சதி வலையே கைது நடவடிக்கைக்கு காரணம். விஜயபானுவின் அறக்கட்டளை வழக்கறிஞர்கள் பகிரங்க குற்றச்சாட்டு........

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நிர்வாகி விஜய பானு என்பவரின் வளர்ச்சியை சீர்குலைக்க செந்தில்குமார் பல கோடி ரூபாய் அபகரித்து, நிகழ்த்திய சதி வலையே கைது நடவடிக்கைக்கு காரணம். விஜயபானுவின் அறக்கட்டளை வழக்கறிஞர்கள் பகிரங்க குற்றச்சாட்டு........

சேலத்தில் பண ரெட்டிப்பு மோசடி வழக்கில் தலைமையகமாக இருந்த தம்பதியினர் கைது. 

சேலம் அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை விஜய பானு என்பவர் நடத்தி வந்தார். இவர் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி அந்த பகுதியினர் இடையே கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விஜய பானு மற்றும் அறக்கட்டளை  ஜெயப்பிரதா, பாஸ்கர், சையதுமுகமது ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்து இட்டு வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில்குமார் அவருடைய மனைவி கரோலின் ஜான்சி ராணி ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்கள் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளாக இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் அவருடைய மனைவி கரோலின் ஜான்சி ராணி ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கோவையில் உள்ள டான் பிட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  பின்னர் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பண ரெட்டிப்பு மோசடி வழக்கு குறித்து உண்மை நிலையை கண்டறிய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள விஜய பானு அவர்களின் அறக்கட்டளையின்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை நமது செய்தி குழு அனுகியது.  அப்பொழுது அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் திடுக்கிட வைப்பதாகவே இருந்தது. அப்போது வழக்கறிஞர்கள் கூறுகையில், செந்தில்குமார் என்பவர் வலியுறுத்தியதன் அடிப்படையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் தொடங்கிய இந்த அமைப்பு, பணம் இரட்டிப்பு செய்து தருவதற்காக தொடங்கப்பட்டதாகவும், இதனை அறிந்த அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் பணத்தை செலுத்தி இதில் பலனும் அடைந்ததாகவும், இந்த அறக்கட்டளையில் தன்னை இணைத்து கொண்டதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து பணம் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, நேர்மையான முறையில் விஜய பானு பணம் முதலீடு செய்தவர்களுக்கு பணம் இரட்டிப்பு செய்து கொடுத்து வந்ததன் அடிப்படையில் விஜய பானுவின் மதிப்பு உயர்ந்ததாகவும் தெரிவித்தஅவர்கள், செந்தில்குமார் என்பவர் தனக்கு கீழ் சுமார் ஒரு இருபதுக்கும் மேற்பட்ட பாதிரியார்களை வைத்துக்கொண்டு பணம் முதலீடு செய்பவர்களிடம் ஒரு தொகையை கமிஷன் அடித்துக் கொண்டு பின்னர் விஜய பானு நடத்தி வரும் அறக்கட்டளையில் பணம் முதலீடு செய்ததாகவும், ஏராளமானவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முதலீடு செய்வதையும் தவிர்த்து உள்ளார். ஒருபுறம் விஜய பானுவின் புகழ் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், அம்மாபேட்டை பகுதியில் இமானுவேல் பேராலயம் அமைப்பதற்காக ஒன்றரை கோடி ரூபாய் நன்கொடை விஜய பானுவிடம் செந்தில்குமார் கேட்டு பெற்றதாகவும், பேராலயம் அமைப்பதற்கான பணியையும் தொடங்கவில்லை. பேராலயம் அமைப்பதற்கான நன்கொடையை பெற்றுக் கொண்டு இந்த நிறுவனத்திலேயே செந்தில்குமார் முதலீடு செய்ததாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் இதனை அறிந்த விஜய பானு அவர்கள், சம்பந்தப்பட்ட செந்தில் குமாரிடம் கேட்டபோது சூழ்ச்சி செய்து வேண்டுமென்றே சிறப்பு பல நாடகங்கள் ஆடி காவல் துறையில் சிக்க வைத்ததாக கூறிய வழக்கறிஞர்கள், இதனை பொறுத்துக் கொள்ளாத செந்தில்குமார் கால் புணர்ச்சி காரணமாக இவரது பெயர் புகழ் அந்தஸ்து ஆகியவற்றை பழி தீர்க்கும் வகையில், சில காவல்துறை அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு தீட்டிய திட்டமே இந்த வழக்கின் உச்சக்கட்டம் என்றனர்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய பானு மற்றும் அவரது நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, செந்தில்குமார் என்பவரும் அவரது மனைவியும் தலைமறைவாக இருந்தனர் என்றும் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் மற்றும் அவரது மனைவியை கைது செய்ய அப்போது புதிதாக பொறுப்பேற்று இருந்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் என்பவர் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்ததாகவும், அது மட்டுமல்லாமல் இந்த வழக்கு தொடர்பாக செந்தில்குமாரின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டு இருந்த நிலையில்,  முடக்கம் செய்யப்பட்டிருந்தவங்கி கணக்குகளை நீக்கம் செய்வதற்காக தனது வழக்கறிஞர் ஒருவருடன் செந்தில்குமார் காவல் நிலையத்திற்கு வந்தபோது, டி எஸ் பி சந்திரசேகர் உத்தரவின் பெயரில் அதிரடியாக செந்தில்குமார் கைது செய்யப்பட்டார் என்றும் கூறிய வழக்கறிஞர்கள், அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையில் பண இரட்டிப்பு செய்து தருவதாக ஏற்பட்ட மோசடியில் 217 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சுமார் 7 கோடி ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அந்தத் தொகையையும் விஜய பானு அவர்கள் திருப்பி தர தயாராக இருப்பதாகவும், இதுபோக புகார் அளிக்காத அவர்களுக்கும் அவர்கள் முதலீடு செய்த தொகையை திரும்ப வழங்குவதற்கும் விஜய பானு அவர்கள் தயாராக இருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் இரட்டிப்பு மோசடி தொடர்பாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் அவர்கள் விசாரணை மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் இருப்பதாக பாராட்டிய அவர்கள், இந்த வழக்கு முடிந்த பிறகு இந்த வழக்கு தொடர்பாக புகார்  அளித்தவர்களுக்கு பணம் திரும்ப வழங்க விஜய பானு அவர்கள் தயாராக  உள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், இந்த பண மோசடி வழக்கில் பல கோடி ரூபாயை அறக்கட்டளை நிர்வாகியான விஜய பானுவுக்கு தெரியாமல் அபகரித்தது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த பிறகு கிராமப்புறத்தில் உள்ள படிக்காதவர்கள் கூட தாங்கள் முதலீடு செய்த பணம் தங்களுக்கு கிடைத்தால் போதும் என்பதை அவர்களது குறிப்பேட்டில் பதிவிட்டது ஒரு புறம் இருக்க, ஆனால் படித்தவர்கள் பண ஆசைக்காக 15 லட்சம் முதல் 25 லட்சம் வரை முதலீடு செய்ததாகவும் அது தற்போது வரை தங்களுக்கு திரும்ப கிடைக்கவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது என்பதும் அறக்கட்டளை வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டாகவே உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விஜய் பானு மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பிறகு செந்தில்குமார் என்பவர் ஜீவன் அறக்கட்டளை என்ற பெயரில் ஏழையை இளையவர்களும் பணம் பெற்று வசூல் செய்ததும் தெரியவந்தது என்பது வழக்கறிஞர்களின் தகவலாகவே உள்ளது. மேலும் இந்த அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களிடம் வசூலித்து பல கோடி ரூபாயை அபகரித்த செந்தில்குமார் இடம் இருந்து அந்த தொகையை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் வழக்கறிஞர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்தப் வழக்கு தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் இனிவரும் காலங்களில் கூடுதல் தகவல் வெளியாகும் என்றே எதிர்பார்க்கலாம்.
இறுதியாக செந்தில்குமரிடம் பணம் முதலீடு செய்தவர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பொறுப்பேற்காது என்பது குறிப்பிடத்தக்கது.
  

ஞாயிறு, 4 மே, 2025

அந்தியூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரி உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் அஞ்சலி!

அந்தியூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரி உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் அஞ்சலி!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). அரிசி வியாபாரி. இவர் கடந்த மாதம் 29ம் தேதி அந்தியூரில் இருந்து பவானி நோக்கி வியாபார வேலையாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பருவாச்சி பகுதியில் வீசிய சூறைக்காற்றில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனால், சரவணன் நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். இதனால், அவரது உறவினர்கள் சரவணனின் உடல் உறுப்புகளை தானமாக அளித்தனர். இதுகுறித்து, அறிந்ததும் நேற்று காலை அவரது வீட்டுக்கு அந்தியூர் தாசில்தார் கவியரசு, வருவாய் ஆய் வாளர், செந்தில்ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் சென்றனர்.

பின்னர், இறந்த சரவணனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த சரவணனுக்கு குணசுந்தரி என்ற மனைவியும், சச்சின் (14) என்ற மகனும், நிஷா கோபிகா (12) என்ற மகளும் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் 98 பேர் ஆப்சென்ட்!

ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் 98 பேர் ஆப்சென்ட்!

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (மே.4) 12 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 4,064 மாணவ, மாணவியர்கள் எழுதினர். 98 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (மே.4) ஞாயிற்றுக்கிழமை ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, வீரப்பன்சத்திரத்தில் உள்ள சிக்கய்யா அரசு கலை அறிவியல் கல்லூரி, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, பெருந்துறை பவானி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தோடு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி (ஐஆர்டிடி), கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகிய 9 இடங்களில் 12 மையங்களில் மொத்தம் 4,162 மாணவ, மாணவியர்களுக்கு தேர்வு நடந்தது. 
தேர்வு மையங்களில் பலத்த சோதனைகளுக்கு பிறகே மாணவ - மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 2 மணிக்கு துவங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நேற்று நடந்த நீட் தேர்வில் 4,064 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். 98 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் 97.64 சதவீதம் பேர் தேர்வை எழுதினர். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வை ஈரோடு மாவட்டத்தில் 92.79 சதவீதம் பேரும், 2023-ம் ஆண்டு 98.13 சதவீதம் பேரும், கடந்த 2024 ஆண்டு 96.84 சதவீத பேரும் நீட் தேர்வு எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சனி, 3 மே, 2025

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலைய போலீசார் கடந்த மாதம் ஈரோடு ஆட்சியா் அலுவலகம், மூலப்பாளையம் சந்திப்பு, கொல்லம்பாளையம், அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா, பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, காளைமாட்டு சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, மதுபோதையில் வாகனம் ஒட்டிய 134 பேர் மீதும், போக்குவரத்து சிக்னலை மீறியதாக 3 பேர் மீதும். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 827 பேர் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கிய 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
அதேபோல், வாகன காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டிய 115 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் இயக்கிய 39 பேர் மீதும், வாகனம் உரிமம் இல்லாமல் இயக்கிய 109 பேர் மீதும் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 1,475 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 400 அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதுதவிர, மதுபோதையில் வாகனம் ஒட்டிய 57 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!

ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!

ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ் குண்டும், குழியுமான சாலை நாளை (திங்கட்கிழமை) முதல் சீரமைக்கப்பட உள்ளது. இதனால் கரூர், காங்கேயம் வழியாக ஈரோடு வரும் வாகனங்கள் சாஸ்திரி நகர், காசிபாளையம் ரயில்வே மேம்பாலம் வழியாக ஈரோடு-சென்னிமலை சாலைக்கு வந்து ஈரோடு செல்லுமாறு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.