வியாழன், 24 செப்டம்பர், 2026

An invitation has been issued for registration regarding the 'Indian Open Chessboxing National Championship,' the General Council meeting, and the election of the new executive committee and office bearers for the 'Chessboxing India' organization, scheduled to take place in Tamil Nadu during the last week of November 2026. R. Faiz Ahmed, General Secretary of the Tamil Nadu State Chessboxing Association, has requested interested parties to contact the email addresses tnscbaoffice@gmail.com or chessboxingtn@gmail.com.

SALEM, 
SK SURESH BABU, 

In a press release issued regarding this,..

Indian Open ChessBoxing National Championship. in Tamilnadu November 2026 last week and Election of General body meeting and ChessBoxing India New govering body. office Bearers of India 

Registration Your Name in tnscbaoffice@gmail.com chessboxingtn@gmail.com.

Contact: Mr  R. FAIZAHAMED General Secretary. Tamilnadu State ChessBoxing Association International Referee and Coach WCBO: Mobile number 9944154083/9944954083.
தமிழ்நாட்டில் 2026 நவம்பர் கடைசி வாரத்தில் 'இந்திய ஓபன் செஸ்பாக்ஸிங் தேசிய சாம்பியன்ஷிப்' போட்டி, பொதுக்குழு கூட்டம் மற்றும் 'செஸ்பாக்ஸிங் இந்தியா' அமைப்பிற்கான புதிய நிர்வாகக் குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு ஆகியவற்றில்
பதிவு செய்ய அழைப்பு. tnscbaoffice@gmail.com அல்லது chessboxingtn@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளை தொடர்பு கொள்ள தமிழ்நாடு மாநில செஸ் பாக்சிங் சங்க பொதுச்செயலாளர் R. ஃபைஸ் அகமது வேண்டுகோள்.

தமிழ்நாட்டில் 2026 நவம்பர் கடைசி வாரத்தில் 'இந்திய ஓபன் செஸ்பாக்ஸிங் தேசிய சாம்பியன்ஷிப்' போட்டி நடைபெறவுள்ளது. இதனுடன் இணைந்து, பொதுக்குழு கூட்டம் மற்றும் 'செஸ்பாக்ஸிங் இந்தியா' அமைப்பிற்கான புதிய நிர்வாகக் குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு ஆகியவையும் நடைபெறும்.
பதிவு செய்ய: tnscbaoffice@gmail.com அல்லது chessboxingtn@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளைத் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு: திரு. R. ஃபைஸ் அகமது (R. Faizahamed) - பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில செஸ்பாக்ஸிங் சங்கம் (Tamilnadu State ChessBoxing Association); சர்வதேச நடுவர் மற்றும் பயிற்சியாளர் (WCBO). அலைபேசி எண்கள்: 9944154083 / 9944954083.

புதன், 23 செப்டம்பர், 2026

சேலம் கோட்டையில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா மற்றும் மஹ்மூத் சுபஹானி  உரூஸ் விழா.. நாடு வளம் பெற சிறப்பு துவா செய்து 3000 பேருக்கு தப்ரூக் வழங்கிய இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்.

சேலம் கோட்டையில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா மற்றும் மஹ்மூத் சுபஹானி உரூஸ் விழா.. நாடு வளம் பெற சிறப்பு துவா செய்து 3000 பேருக்கு தப்ரூக் வழங்கிய இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் கோட்டையில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா மற்றும் மஹ்மூத் சுபஹானி  உரூஸ் விழா.. நாடு வளம் பெற சிறப்பு துவா செய்து 3000 பேருக்கு தப்ரூக் வழங்கிய இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர். 

சேலம் கோட்டை மேல்தெரு பள்ளிவாசலில் ஆண்டு தோறும் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மஹ்மூத் சுபஹானி உரூஸ் விழா ஆகியவை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி சேலம்  கோட்டை இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் 93 ஆம் ஆண்டு விழாவாக பிறந்தநாள் மற்றும் உரூஸ் விழா ஆகியவை சேலம் கோட்டை மேல் தெரு பள்ளிவாசலில் கடந்த 10 நாட்களாக சிறப்பு தொழுகைகளுடன் நடைபெற்று வந்தது. 
இதன் இறுதி நாளான நேற்று நாடு நலம் பெறவும், தமிழக விவசாயிகள் வளம் பெறவும் மற்றும் தமிழக மாணவ மாணவிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்பன உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை வலியுறுத்தி நேற்று இரவு சிறப்பு துவா நடத்தி முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சேலம் கோட்டை இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா மற்றும் மொஹமது சுபஹானி உரூஸ் விழாவினை ஒட்டி கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 3,000 அதிகமான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் தப்புருக் எனப்படும் அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர். 
40-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட டபராக்களில் சுமார் 3000 கிலோ வெள்ளை குஸ்கா, சிக்கன் வருவல், தால்ஜா மற்றும் கேசரி ஆகியவை தப்றுக்காக வழங்கப்பட்டன. சேலம் ஜாமியா மசூதியின் முன்னாள் முத்த வள்ளியும், சேலம் கோட்டை இளைஞர் நற்பணி மன்றத்தின் கௌரவ தலைவருமான அமான் என்கின்ற நாசர் கான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இளைஞர் அறக்கட்டளை நிர்வாகிகள் தாஜுதீன், பண்டு, அஸ்மத் கான், நூர், அலி, பாபு, ஹமீது, ஜாவித் மற்றும் இர்பான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு 3000-க்கும் அதிகமான பொது மக்களுக்கு சைவ அசைவ உணவுகளை வழங்கி மத நல்லிணக்கத்தை போற்றி மகிழ்ந்தனர்.

திங்கள், 21 செப்டம்பர், 2026

போதுமான நீர் இல்லை, சம்பா மற்றும் தாளடி சாகுபடி எப்படி சாத்தியம் ?. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஓரணியாக திரண்டு வரும் போது மட்டும் தான் உழவர்கள் நலனில் அக்கறை இல்லாத த.வெ.க அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து வீழ்த்த முடியும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி ஆதங்கம்.

நாமக்கல்,

மேட்டூர் அணையின் நீர் இருப்பு பாதிக்குக்கு வெகுவாக குறைந்துள்ளது. சம்பா சாகுபடி சாத்தியமா ? , உழவர்களுக்கு அரசின் அறிவுரை என்ன ? . 35 நாட்களுக்கு மட்டுமே மேட்டூர் அணையின் நீர் திறக்க முடியும் எனும் சூழலில் சம்பா சாகுபடி சாத்தியமா என உழவர்கள் கவலை ? . காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை மதித்து கர்நாடகா காவிரியில் இருந்து உரிய நீரை திறந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. சாகுபடி பணிக்கான பணி தொடங்காத நிலையில், நாற்றங்கால் உருவாக்கி அதில் இருந்து நாற்றுகளை எடுத்து நடவு செய்வதற்கு வாய்ப்பு இல்லை. இந்த சூழலில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து தமிழக அரசு எது போன்ற ஆலோசனை வழங்கப் போகின்றது ? உழவர்களின் வேதனையாக உள்ளது. இது மேட்டூர் அணையை நம்பி 11 டெல்டா மாவட்டங்களில் உளவு பணிகளை மேற்கொள்ளும் உழவர்கள் தற்பொழுது எதிர்கொண்டுள்ள நிலையாக உள்ளது. 
இதுகுறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R. வேலுச்சாமி தனது செய்தி குறிப்பில், நாள்தோறும் விவசாயிகளின் நலன் கருதி அறிக்கைகள் வெளியிட்டாலும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் மேற்கொண்டாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றது தான் டி.வி.கே அரசு என்று குற்றம் சாட்டிய அவர், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஓரணியாக திரண்டு வரும்போது மட்டும் தான் த.வெ.க அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க முடியும் என்றும் அறிக்கை, போராட்டங்கள் மற்றும் செய்தியின் வாயிலாக தமிழக அரசை வலியுறுத்தினாலும் கூட எந்த பயனும் இல்லை, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரே அணியில் வந்தால் மட்டுமே இந்த தமிழக அரசை வீழ்த்தி அடிக்க முடியும் என்றார். 
மேலும் தமிழக விவசாயிகளின் நலனில் செவிசாய்க்காத இந்த அரசால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் நலனும் இல்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி.
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் த.வெ.க தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணிக்கு முழு ஆதரவு. தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநிலத் தலைவர் Dr. நாகா.R. அரவிந்தன் அறிவிப்பு. தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகா.R.அரவிந்தன், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு மாநில இளைஞரணி செயலாளர் M.ஹரி ஆகியோர் நியமனம்.

சேலம்.

தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநிலத் தலைவர் Dr. நாகா ஆர் அரவிந்தன் சேலத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார். 
அப்போது, தேசிய சிறுபான்மையினர் சமூகக் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் முடிவின்படி தமிழகத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணிக்கு கூட்டமைப்பு  முழு ஆதரவு அளிக்கிறது. மேலும் இடைத் தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து சுமார் 50,000 வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி பெற கூட்டமைப்பு முழு பாடுபடும் என்று தெரிவித்தார். 
கூட்டமைப்பு சார்பாக தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகா ஆர்.அரவிந்தன், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு மாநில இளைஞரணி செயலாளர் எம்.ஹரி நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூட்டமைப்பின் மாநில தலைவர் நாகா.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த சேலம் மாநகராட்சியில் தீவிர நடவடிக்கை. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்து பொருட்களும் தேவையான அளவில் உள்ளன. சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தகவல்.

தமிழகத்தில் தற்போது அதி தீவிரமாக பருவநிலை மாற்றத்தின் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 60 கோட்டங்களை  உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கூறுகையில், சேலம்  கார்ப்பரேஷன் சார்பா 200 பேர் டிபிசி பணியாளர்கள்  இருக்காங்க ஒரு நாளைக்கு ஒரு ஆள் 50 வீடு பாக்குறாங்க எதுக்கு காய்ச்சல் இருக்கா இல்லையா அப்படின்னு டெஸ்ட் பண்றதுக்கு ஒரு ஆள் அத நான் 200 பேர் நாங்க நியமித்திருக்கிறோம் அதுல ஒரு நாளைக்கு ஒரு ஆள் வந்து 50 வீடு பார்ப்பாங்க பார்த்துட்டு இருக்காங்க அது இல்லாம ஹாஸ்பிடல்ல தயார் நிலையில் டாக்டர்ஸ் இருக்காங்க. அடுத்து இந்த கொசு ஒழிப்புக்கு மருந்து அடிச்சிட்டு இருக்கோம் ஒவ்வொரு இடத்துக்கும் மருந்து அடிக்கிறோம், 
தற்பொழுது டெங்குவை கட்டுப்படுத்தும் விதமாக இப்ப கொஞ்சம் எக்ஸ்ட்ரா அடிக்கிறாங்க.  இன்னொன்னு என்னன்னா தண்ணி இப்ப வந்து நீங்கள் பாத்தீங்கன்னா தேங்கி இருக்கிற இடம் தண்ணி இருக்கும் இந்த தொட்டி அது மாதிரி இடமெல்லாம் ரப்பர் டயர் இந்த மாதிரி எல்லாம் தண்ணி தேங்கி இருக்கும் அதுக்கும் வந்து சரியான ஆள போட்டு பார்த்துட்டு இருக்கிறோம். அது எல்லா வகையிலுமே அது ப்ராப்பரா நடந்துட்டு இருக்குது.  டாக்டர்களும் தயார் நிலையில் இருக்கிறாங்க. மருந்தெல்லாம் எல்லா வகையிலும் இருக்கு பொதுமக்கள் வந்து கடைபிடிக்கிறது. நாள்தோறும் மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும்  50 வீட்டுக்கு போய் பாக்குறாங்க. 
ஒரு நாளைக்கு ஒரு நபர் மட்டும் 50 பேர் போய் பார்த்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் போதுமான விழிப்புணர்வு அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா. 1088 மாணவ மாணவிகளுக்கும், ஆறு முனைவர் பட்ட பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டு.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா. 1088 மாணவ மாணவிகளுக்கும், ஆறு முனைவர் பட்ட பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டு.

சேலம், 
S.K.சுரேஷ்பாபு.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா. 1088 மாணவ மாணவிகளுக்கும், ஆறு முனைவர் பட்ட பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டு.

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  ஐந்தாவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வள்ளியப்பா கலையரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. சொ .வள்ளியப்பா அவர்கள் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் திரு.சொக்கு வள்ளியப்பா, திரு.தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.மை காதர் நவாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் விஜய் ஆனந்த் அவர்கள் 2022-2025 ஆம்  கல்வியாண்டில் பயின்ற 1088 மாணவர்களுக்கும், ஆறு முனைவர் பட்ட பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் வள்ளியப்பா அவர்கள் பேசும் பொழுது "மனிதனின் அறிவை வளர்த்து அவனுக்கு நல்ல ஒழுக்கத்தையும், திறமையையும் தந்து முழுமையான மனிதனாக மாற்றும் ஒரு அரும்பெரும் கருவி கல்வி ஆகும்" அந்த கல்வியை நன்முறையில் பயன்படுத்தி நல்சமுதாயத்தை உருவாக்க காத்திருக்கும்  மாணவர்களுக்கு வாழ்த்துகள் என வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல் மதிப்பெண் பெற்ற 6 மாணவர்களுக்கு தலா ரூ.10000/- இரண்டாம் இடம் பெற்ற 9  மாணவர்களுக்கு தலா ரூ.5000/- மூன்றாம் இடம் பெற்ற 6  மாணவர்களுக்கு தலா ரூ.4000/- மற்ற தர வரிசை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.3000/-  என மொத்தம் ரூபாய் 2,25,000 வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக அளவில்   உயிர் தொழில் நுட்பவியல் மற்றும் காட்சித்தொடர்பியல், உளவியல், கணக்கியல் மற்றும் நிதியியல், வணிகவியல், வணிக மேலாண்மை, ஆகிய துறை மாணவர்கள் என மொத்தம் 6 தங்கப்பதக்கங்கள்  பெற்று சாதனை படைத்தனர். தொடர்ந்து ஐந்தாவது முறையும் உயிர் தொழில் நுட்பவியல் துறை சார்ந்த மாணவர்கள் , காட்சித்தொடர்பியல்  மாணவர்கள்  தங்கப்பதக்கம் மற்றும் முதல் பத்து இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் சிறப்பிடம் பெற்ற 53  மாணவர்களுக்கு சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில்   தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் தர வரிசையில் இடம் பெற ஊன்றுகோலாய் இருந்த  துறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
2022-2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற  மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற்றதுடன் பட்டம் பெற்ற  மாணவர்களும் தனிச்சிறப்புடன் கூடிய முதல்நிலை பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது போற்றுதலுக்குரியது. பட்டமளிப்பு விழாவின் நிறைவாக கல்லூரியின் முதல்வர் உறுதிமொழி வாசிக்க தாங்கள் கற்ற கல்வி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் என்றும் உறுதியுடன் செயல்படுவோம் என்று மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

சனி, 19 செப்டம்பர், 2026

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவித்து 18 நாட்கள் ஆகியும் அமல்படுத்தாத தமிழக அரசு. தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு  தமிழக விவசாயிகள் ஒருபோதும் காரணம் அல்ல. அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலை உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி தமிழக முதல் அமைச்சருக்கு கோரிக்கை.

தமிழக விவசாயிகளை பொருத்தவரை அவர்களுக்கு  நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் பல இருந்தாலும் கூட,  பால் மற்றும் எருமை பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்  என்பதும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றே. பால் உற்பத்தியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பால் கொள்முதல் விலை உயர்வை அறிவித்தார். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு 18 நாட்கள் ஆகியும் தற்போது வரை விவசாயிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்பது தமிழக விவசாயிகளின் குறிப்பாக, பால் உற்பத்தியாளர்களின் குற்றச்சாட்டு. பழைய விலையிலேயே கொள்முதல் செய்வதாகவும், இது தொடர்பாக தங்களுக்கு எந்த விதமான உத்தரவும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை என்பது பால் கொள்முதல் செய்யும் கூட்டுறவு ஒன்றிய அதிகாரிகளின்  தகவலாக உள்ளது. ஆவின் ஒன்றியத்திற்கு பால் கொடுக்காமல் வெளியே சென்ற விவசாயிகளையும் மீண்டும் அழைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதால் தமிழகத்தில் தற்போது ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு விவசாயிகளாக ஆவின் ஒன்றியத்திற்கு பால் வழங்காமல் தனியாருக்கு பால் வினியோகித்தால் எதிர்காலத்தில் ஆவின் நிறுவனம் என்று ஒன்று இருந்ததே அழிந்து விடும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R.வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக விவசாயிகளின் கனவு திட்டமான பால் கொள்முதல் விலை உயர்வு என்பதனை 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது அறிவிப்பாகவே மட்டும் இல்லாமல் இதனை உடனடியாக செயல்படுத்த தமிழக முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பால் கொள்முதல் விலை உயர்வு கிடைக்கவில்லை என்பதால் தனியாருக்கு பால் உற்பத்தியாளர்கள் செல்வதை தடுக்க அதிகாரிகள் மட்டத்தில் ஒரு குழுவை அமைத்து ஆவின் நிறுவனத்திற்கு பால் வரத்தை  அதிகரிக்கவும், ஆவின் நிறுவனத்தை லாபகரமாக நடத்திடவும் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 
மேலும் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் ஆவின் நிறுவனமும் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பால்வளத்துறை மூலமாக தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து கொள்முதல் விலையை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கில் இருப்பு வைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை பொருத்தவரை உரிய நேரத்தில் உரிய காலகட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை அறிவித்து இருந்திருந்தால் இதுபோன்று பால் தட்டுப்பாடு வந்து இருக்காது.  விவசாயிகளிடம் கலந்து பேசி பால் கொள்முதல் விலை உயர்வை உயர்த்தாததால் தான் இந்த தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் தற்பொழுது நிலவுகிறது என்றும் உற்பத்தியாளர்களை பொறுத்த வரை எங்கு லாபம் கிடைக்கிறது அங்குதான் செல்வார்கள் என்றும் அரசு தான் இதற்கு முழு முதற் காரணம் என்றும் தமிழக விவசாயிகள் ஒருபோதும் காரணம் அல்ல என்றும் தனது செய்தி குறிப்பில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் R. வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.