ஈரோடு 46 புதூர் பஞ்சாயத்துக்குட்பட்ட குப்பை கிடங்கில் இருந்து வெளியேறிய புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூதாட்டி உயிரிழந்தாக குற்றம் சாட்டி பொதுமக்கள் சாலை மறியல் - மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Dr சி.கே சரஸ்வதி மற்றும் காவல்துறை பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டதால் பரபரப்பு..!
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள முத்துகவுண்டன் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் 370 குடியிருப்பு வீடுகள் உள்ளது.
இந்த குடியிருப்புக்கு அருகே 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புறம்போக்கு நிலத்தில், 46 புதூர் ஊராட்சியை சேர்ந்த பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் குப்பைகளை சேமித்து பிரித்தெடுக்கும் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது இந்த குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை கொட்டி எரித்து வருவதாகவும், அதிலிருந்து வெளியேறும் புகையானது இந்தப் பகுதி முழுவதும் உள்ள குடியிருப்புகளுக்குள் பரவி பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்,
தொடர்ந்து ஸபா நியூஸ் தமிழுக்கு பேட்டியளித்த பொதுமக்கள் கூறுகையில், இங்கு எரியும் குப்பையில் இருந்து வெளியேறும் புகையால் மூச்சுத் திணறல், திடீரென மயக்கம் அடைதல், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருவதால், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரபினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கைகள் குறித்து யாரும் செவிசாய்க்கவில்லை என வலியுறுத்தி இன்று முத்துகவுண்டன் பாளையம் ரிங்ரோட்டில் திடீரென திரண்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுப்பட்டனர்,
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் தீபா தலைமையில் காவல்துறையினர் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Dr சி.கே சரஸ்வதி ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர், இதனால் ஈரோடு - முத்தூர் பிரதான மற்றும் திண்டல் கொக்கராயன் பேட்டை ரிங் ரோட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, இப்பிரச்சினையின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4ம் தேதி சென்னியம்மாள் நாச்சி என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அன்னக்கொடி (57) என்ற பெண்ணும் பாதிக்கப்பட்டு பாண்டிச்சேரி ஜிக்மர் மருத்துவமனையில் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் குற்றம் சாட்டினர்.
0 coment rios: