ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பதிவு செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இதன் காரணமாக அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனையடுத்து திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு களம் இறங்குகிறார். இதேபோல் நாம்தமிழர் கட்சி, தேமுதிக, சுயோட்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதனையடுத்து தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி தேமுதிகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர், திமுக சார்பாக 30க்கும் மேற்பட்ட தமிழக அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தற்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு வாங்கும் பணியை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 321 முதியவர்கள் மற்றும் 31 மாற்றுத் திறனாளிகளிடம் வாக்குப்பதிவு செய்யும் பணியை தேர்தல் ஆணையம் இன்று துவங்கியுள்ளது. தபால் வாக்குப்பதிவு மொத்தம் 2 நாட்கள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வகின்ற மார்ச் 2ஆம் தேதி சித்தோடு போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் (IRTT) எண்ணப்பட உள்ளது.
இதற்காக பணிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணணுண்ணி நேரில் சென்று பார்வையிட்டார்.
0 coment rios: