மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 1.25 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சிங்கம்பேட்டையை சேர்ந்தவர் மூர்த்தி, பவானி மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 24 நபர்களிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்த நிலையில் அவர்களிடம் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
வேலை கிடைக்கும் என மூர்த்தியின் பேச்சை நம்பி ஏமாந்த சிங்கம்பேட்டை மாடசாமி என்பவர் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மூர்த்தியை பிடித்து விசாரணை செய்த நிலையில் அவர் மோசடியாக 24 நபர்களிடம் 1.25 கோடி பணம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபி கிளை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
0 coment rios: