அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் 1045 குளங்களுக்கு தண்ணீர் செல்ல பணிகள் முடிக்கபட்டு உள்ளது, மேலும் 15 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது, ஓரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் திறந்து வைப்பார் என தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி பேட்டியளித்தார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் குறித்து ஆய்வுப்பணிகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீர் பாசன துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர், தமிழக வீட் வசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்... அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை பொறுத்தவரை ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் பாக்கியுள்ளத.. 98 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, இன்னும் 200 மீட்டர் பணிகள் மட்டுமே் பாதிக்கப்பட்டுள்ளது, மொத்தமாக 600 மீட்டர் மட்டுமே பணிகள் உள்ளது, ஆறு பம்பிங் ஸ்டேஷனில் 5 பம்பிங் ஸ்டேஷன்கள் சோதனைகள் முடிந்தது, நாளை 6 வது பம்பிங் ஸ்டேஷன் சோதனை நடைபெறும் அதுவும் 3 நாட்களில் முடிவுறும், சாலையை ஓட்டி போடப்படு உள்ளதால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது, அத்திகடவு - அவிநாசி திட்ட பணிகளும் அனைத்து பணிகளும் . 25 நாட்களுக்குள் முடிவு பெறும், என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவது நிறுவனத்திற்காக நிலம் எடுப்பது இல்லை இந்த திட்டத்திற்காக தான் நிலம் எடுக்கப்படுகிறது, எந்த மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆய்வு நடந்து வருகிறது
இரண்டு விதமான கருத்து உள்ளது விவசாயிகளிடம் பேசி அரசு நேரடியாக நிலம் கையகப்படுத்தும் போது குறைவான இழப்பீடும் தனியார் கையகப்படுத்தும் போது கூடுதலான இழப்பீடும் கிடைக்க வாய்ப்பு உள்ளது, விவசாயிகளிடம் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ள படும், நீதிமன்றம் பிரச்சினை காரணமாக திட்டத்தை செயல்படுத்த எந்த தடையும் இல்லை முதன்மை குழாய் செல்லும் வழியில் எந்த பிரச்சினையும் இல்லை, 1045 குளங்களுக்கு தண்ணீர் செல்ல பணிகள் முடிக்கபட்டு உள்ளது, மேலும் 15 குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது, ஓரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் திறந்து வைப்பார் என்றார். கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுண்ணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
0 coment rios: