ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள இராட்டைசுற்றி பாளையத்தில் உலக சாதனை பெற்ற தென்னக காசியான பைரவர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள இராட்டைசுற்றி பாளையத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான 39 அடி உயர காலபைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த 39 அடி உயரம் கொண்ட சிலையை நுழைவு வாயிலாக கொண்ட தென்னக காசி பைரவர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இக்கோயிலின் கும்பாபிஷேகத்தையொட்டி வியாழக்கிழமை கிராம சாந்தி நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி தொடங்கியது. அதனை தொடர்ந்து சொர்ணாகர்ஷண பைரவருக்கு நெய் அபிஷேகத்தை பைரவர் பீட ஸ்ரீ விஜய் சுவாமிஜி தொடங்கி வைத்தார். தொடர்ந்து வாஸ்து சாந்தி பிரவேசம் நடைபெற்றது. இதனையடுத்து கோபூஜை, தனபூஜை, அஸ்த்ர ஹோமம், அக்னி சங்கிரஹனம் தேவதா அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, புன்யாக வாசனை, பஞ்சகவ்யம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணா ஹிதி, தீபாரதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மூலாலய கோபுரம், ராஜகோபுரம் மற்றும் பரிவாரம் மூர்த்தி அனைத்திற்கும் கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் கோபுர சிலைகள் கண் திறத்தல் நிகழ்ச்சியும், மாலையில் பரிவாரங்களுடன் கும்பாபிஷேக கலச தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி அவல்பூந்துறை ஈஸ்வரன் கோயில் இருந்து நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக ஈஸ்வரன் கோயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீர்த்தங்களுக்கு அபிஷேகம் ஆதாரனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தீர்த்த ஊர்வலத்தில் யானை, குதிரைகள் அணிவகுத்து செல்ல அதற்கு முன்பு பொய்கால் குதிரை ஆட்டம், காவடி ஆட்டம், வானவேடிக்கை என பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து கும்பாபிஷேக முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜையும், மூன்றாம் காலயாக பூஜையும் நடைபெற்றது. பின்னர் இரவு வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். அதனை தொடர்ந்து நேற்று திங்கள் கிழமை காலை நான்காம் கால யாக பூஜையும் திருக்கயிலாய வாத்தியம் ஓதி அவல்பூந்துறை ஸ்வர்ண பைரவர் பீடம் ஸ்ரீ விஜய் சுவாமிஜி ஆசிர்வாதத்துடன் அவல்பூந்துறை ஸ்ரீ செல்வ ரத்தினம் சிவாச்சாரியார் நடத்தினார், இந்த கும்பாபிஷேகத்திற்கான நட்சத்திர கலச தீர்த்தாபிஷேகம் பைரவ அலங்கார ஆரத்தி அர்ச்சனைக்கு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாக குண்டத்தில் இருந்து கலசம் எடுத்து சென்று பைரவருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்தங்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள்| முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்,,இந்த கும்பாபிஷேகத்தையொட்டி அரச்சலூர் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் 150க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
படங்களின் விளக்கம்
அவல்பூந்துறை இராட்டை சுற்றி பாளையத்தில் பைரவர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி 39 அடி உயர பைரவர் சிலைக்கு பைரவர் பீட விஜய் சுவாமிஜி புனித நீர் ஊற்றினார்.
அவல்பூந்துறை இராட்டை சுற்றிபாளையத்தில் உள்ள பைரவர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்.
அவல்பூந்துறை இராட்டைசுற்றி பாளையத்தில் உள்ள பைரவர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
முழுமையான வீடியோவை காண கிழே உள்ள லிங்கை கீளிக் செய்து பார்த்து மகிழுங்கள்...
https://www.youtube.com/live/alB3cGkdcAo?feature=share
https://www.youtube.com/live/q8ZrrhpKrb0?feature=share
0 coment rios: