ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் மற்றும் போலீசார் ஈரோடு திண்டல், தண்ணீர்பந்தல்பாளையம் மற்றும் பெருந்துறை சாலை பகுதியில் உள்ள 32 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள 5 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 5 கடைகளுக்கும் மொத்தம் ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 5 கடைகளும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
0 coment rios: