ஈரோடு பெரியார் நகர், சூளை மல்லிகை நகர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகளை சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி, சாந்தி ஆகியோர் வழங்கினர்.
ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்கள் மற்றும் நடுநகர் அரிமா சங்கம் சார்பில் பசிப் பிணிதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏழை எளிய முதியோர், மாற்றுத்திறனாளிகள் 148 பேருக்கு தினமும் வசிப்பிடம் தேடிச்சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கண்ட நபர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா ஈரோடு பெரியார் நகர், சூளை மல்லிகை நகர் மற்றும் சேனாதிபதி பாளையம் ஆகிய பகுதிகளில் நடந்தது. இந்த விழாவில் சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குனர் சாந்தி துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு, 148 பேருக்கு புத்தாடைகளை வழங்கினார்கள்.
இதில் நடுநகர் அரிமா சங்க பட்டய தலைவர் முத்துசாமி, சங்க தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர்கள் பாபு, சிவசாமி, பொருளாளர் சுப்பிரமணியம், திட்ட இயக்குனர்கள் ஈஸ்வரமூர்த்தி, சரவணன், கண்ணன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
0 coment rios: