திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஈரோடு மாவட்டம் பவானியில் தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் நிவாரணப் பொருள்கள் திரட்டப்பட்டன.
அதன்படி, பவானி நகரில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ரோட்டரி சங்க நிர்வாகி சண்முகசுந்தரம் தலைமையில், நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, தலா 3 சப்பாத்திகள் கொண்ட 10,000 பொட்டலங்கள் தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டு, 50 பேர் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை முதலே இப்பணியில் ஈடுபட தொடங்கினர்.
தொடர்ந்து, 70க்கும் மேற்பட்டோர் சப்பாத்தி, தக்காளி தொக்கு பொட்டலம் கட்டும் பணிகள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, 10,000 சப்பாத்தி பொட்டலங்கள் அடங்கிய வாகனம் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது தவிர பொதுமக்கள் அளித்த நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டன.
0 coment rios: